கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பெருமை சேர்த்த வீரர்கள் -
குறித்த விளையாட்டில் பங்குபற்றி வெற்றியீட்டிய குறித்த பாடசாலை அணி வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று பகல் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து குறித்த வீரர்கள் பாடசாலைவரை அழைத்து செல்லப்பட்டனர். விளையாட்டு அமைச்சும், கல்வி அமைச்தும் இணைந்து நடாத்திய தேசிய விளையாட்டுக்களில் கபடி போட்டியில் குறித்த பாடசாலை பெண்கள் பிரிவில் இருவேறு வயது பிரிவுகளில் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற தங்கம் மற்றம் வெண்கல பதக்கங்களை தம்வசப்படுத்தின.
20 வயது பிரிவில் விளையாடிய அணி வெண்கல பதக்கத்தை பெற்றது. இதேவேளை 17வயது பெண்கள் பிரிவில் போட்டியிட்ட அணியினர் முதல் இடத்தை பெற்று தேசிய ரீதியில் தங்கத்தை சுவீகரித்தது.
கடந்த 10ஆம் திகதி கண்டி தியகம பிரதேசத்தில் உள்ள மகாவலி தேசிய பாடசாலையில் குறித்த போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கதாகும். போட்டியில் வெற்றிபெற்று மாவட்டத்திற்கு பெருமை தேடி கொடுத்த வீராங்கனைகளை பாடசாலை சமூகம் ஆர்வத்துடன் வரவேற்றது.
ஏனைய பாடசாலை வீரர்களுடன் ஒப்பிடுகையில், போசாக்கு, விளையாட்டு வசதிகள் உள்ளிட்டவற்றில் எமது பிள்ளைகள் பின்தங்கி உள்ளதாகவும். இருப்பினும் அத்தனை குறைபாடுகள் மத்தியிலும் குறித்த வீராங்கனைகள் தேசிய ரீதியில் வெற்றி பெற்றுள்ளதாகவும் பாடசாலை அதிபரும், அணி தலைவர்களும் குறிப்பிடுகின்றனர்.
கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பெருமை சேர்த்த வீரர்கள் -
Reviewed by Author
on
September 12, 2018
Rating:

No comments:
Post a Comment