பிரியங்கா காந்தி, நளினியை சிறையில் சந்தித்த பின்னரே ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்! -
2008ம் ஆண்டு பிரியங்கா காந்தி, வேலூர் சிறையில் நளினியை சந்தித்த போது, தந்தையை கொலை செய்தது யார் என தெரிந்த பின்பு தான் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக தமிழக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகளை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பொது கூட்டம் இடம்பெறுகின்றன.
இதன்படி, தமிகத்தின் 32 மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று மாலை பொதுக்கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற கண்டன பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில், இந்தியா சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில் இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளித்ததாகக் கூறினார்.
இது ஈழத் தமிழர் ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், தி.மு.க அரசுகள் தான் காரணம் என்று அ.தி.மு.க குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விடயம் குறித்து கடந்த வாரம் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது இரு கட்சிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டிக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 32 மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று மாலை பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
சேலம் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, தேனி பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், கரூர் பொதுக்கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா காந்தி, நளினியை சிறையில் சந்தித்த பின்னரே ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்! -
Reviewed by Author
on
September 26, 2018
Rating:

No comments:
Post a Comment