மன்-புனித லூசியா மகா வித்தியாலய மாணவன் நிசோன் டீனு தேசிய அணிக்கு தெரிவு....
வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பள்ளிமுனை மன்-புனித லூசியா மகா வித்தியாலயத்தில் தரம் 12 கலைப்பிரிவில் கற்கும் நெல்சன் கணுதாசியஸ் நிசோன் டீனு இலங்கை பாடசாலை தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார்.
வடமாகாணத்தில் இருந்து இம்முறை தேர்வானவர் இவர் ஒருவரே. மன்னாரில் இருந்து மீண்டும் ஒரு வீரர் தேசிய அணிக்கு தெரிவு.
சிறுவயதில் இருந்தே உதைபந்தாட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு விளையாடி வரும் நெ.க.நிசோன் டீனு இவரின் விளையாட்டு திறமையின் வெளிப்பாடுகளாக....
- 2015ம் ஆண்டு 15 வயது பிரிவில் கொழும்பு St.Benedicts College அணியில் விளையாடியமை.
- 2016 05பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி தேசிய ரீதியில் நடைபெற்றது தலைவராக செயற்பட்டமை
- 2017-வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் 18வயது ஆண்பிரிவினருக்கான போட்டியில் தலைவராக செயற்பட்டு முதலாம் இடத்தினைப்பெற்று தந்தார்.
- 2018-மகாண மட்டத்தில் எமது பாடசாலை 4ம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது 20 வயது பிரிவில் கலந்து கொண்டார்.
- 2018- வடகிழக்கு மாகாண(NEP)மன்னார் லீக் அணியில் கலந்து கொண்டார்
- மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட அணியில்-MFC கலந்து கொண்டு தேசிய ரீதியில் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் தேசிய அணியானது இந்தியாவின் தேசிய அணியுடன் விளையாடுவதற்காக தெரிவு செய்யப்பட்டு 10 நாள் சுற்றுப்பயணம்-20-09-2018 செல்லவுள்ளார்.
இவருக்கு மன்னாரில் பயிற்றுவிப்பாளராக ஜோசப் சாந்தன் பிகிறாடோ செயற்படுகின்றார்.
மன்னாருக்கு பெருமை சேர்த்த நெல்சன் கணுதாசியஸ் நிசோன் டீனு வீரனுக்கும் பயிற்றுவித்த பயிற்சியாசிரியருக்கும் பாடசாலை அதிபருக்கும் பெற்றோருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் நியூ மன்னார் இணையம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
குறிப்பு-பயிற்சிக்காக தற்போது கொழும்பில் உள்ள நெல்சன் கணுதாசியஸ் நிசோன் டீனு அவர்கள் இந்தியா 10நாள் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டு விளையாடி தனது திறமையை வெளிப்படுத்த செல்வதற்கான கட்டணமாக 75000ரூபா தேவைப்படுவதாக பாடசாலை அதிபர் மூலமாக அறிந்து கொண்டேன். திறமைகளை இந்தப்பணம் தான் நிர்ணயிக்கின்றது அடக்கடவுளே…!!!
பணம் செலுத்த தவறும் பட்சத்தில்….முடிந்தவர்கள்….
தகவல்-மன்-புனித லூசியா மகா வித்தியாலயம்
தொகுப்பு-வை.கஜேந்திரன்

மன்-புனித லூசியா மகா வித்தியாலய மாணவன் நிசோன் டீனு தேசிய அணிக்கு தெரிவு....
Reviewed by Author
on
September 05, 2018
Rating:

No comments:
Post a Comment