உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்திய செப்டம்பர் 11 தாக்குதல்
கடந்த 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி, ஒசாமா பின்லேடனின் அல்-காய்தா அமைப்பின் பயங்கரவாதிகள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் 110 மாடி இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோதி தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.
2001-ல் இதே நாளில் காலை 8:45-க்கு உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் வடக்குக் கோபுரக் கட்டிடத்தின் மீது ’பிளைட்-11’ விமானம் மோதியது இதனைத்தொடர்ந்து சரியாக 18 நிமிடங்களில் தெற்குக் கோபுரக் கட்டிடத்தின் மீது மற்றொரு விமானம் மோதியது.
அப்போதுதான் அது பயங்கரவாதத் தாக்குதல் என்பது பலருக்கும் தெரியவந்தது. மற்றொரு விமானம் காலை 9:45-க்கு பென்டகன் மீது மோதியது. கடத்தப்பட்ட 4-வது விமானம் பென்சில்வேனியா அருகில் ஒரு விவசாய நிலத்தில் விழுந்தது.
கடத்தல்காரர்களுடன் பயணிகள் நடத்திய போராட்டத்தின் முடிவில் விமானம் தரையில் விழுந்தது என்று பின்னர் தெரியவந்தது. அனைத்துச் சம்பவங்களிலும் மொத்தம், 2,996 பேர் உயிரிழந்தனர்.
உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்திய செப்டம்பர் 11 தாக்குதல்
Reviewed by Author
on
September 12, 2018
Rating:

No comments:
Post a Comment