"பசி"
நீ போம்மா.......போம்மா..... மாமா கூப்பிடுறார்…..
நான் சாப்பிட்டன் மாமா வாங்கித்தந்தார்..........
மாமாக்குப்பசிக்குதாம் உன்னை வரட்டாம் தனது சின்ன மகளின் வார்த்தை அறியாத வயசில் அன்பு மகள் சொன்னது.
இரண்டு கையிலும் உணவுப்பண்டங்களை வாங்கி வாயில் அவசரமாக திணித்து கொண்டே அந்தளவிற்குப்பசி சும்மா பசியல்ல கொலைப்பசி சற்று நேரத்தில் திண்டு தீர்த்தால் சின்ன மகள்…மாமாவும் சிறிய புன்முறுவலோடு சென்றார்…
மாமா நாளைக்கும் வாங்கோ…. எனக்கு பசிக்கும்…மாமா எனக்கும் தான்…
நேற்றொரு மாமா வந்தார்…
இன்டைக்கு ஒரு மாமா வந்தார்…..
எனக்கு எத்தனை மாமா அம்மா…. அவள் வாய்திறக்கவில்லை கண்திறந்தது கண்ணீர் அருவியாய்….நல்ல மாமா…. மாமாக்கள் வரும்போதெல்லாம் என் பசி பறந்து விடுகின்றது…..
நீலவாணி நீண்ட கூந்தல் செந்நிற மேனி நிலவுக்கே ராணியவள் சும்மா துள்ளித்திரிந்தவளை அம்மா ஆக்கினான் அந்தப்படுபாவி குடிகாரன் கோவி சும்மாவே தூற்றும் சுற்றம் இவளை சும்மா விடுமா…. கல்யாணமாகமலே தாயானாள் கதைவேறுதானே கோபுரத்தில் இருந்தவள் கொட்டில் வீட்டில் குடியேறினாள் கோபியுடன் குடிப்பதே காலையில் இவளைப்போட்டு அடிப்பதே மாலையில் வேலை பஞ்சனையில் படுத்தவள் பஞ்சு போல ஆனாள் பகலும் இரவும் பந்தாடுவான் கோவி அப்போது தான் பிறந்தாள் மகள் கொஞ்ச நாள் ஓய்வாக விட்டிருந்தான் ஏனோ அடியுதை இல்லை பிள்ளை பிறந்ததும் திரிந்தி விட்டான் என்று நினைக்க….
மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் பிள்ளையின் முகம் என்ர முகம் இல்லை யாருக்கு பெத்தனி…. ஊருக்கு பெத்து வைத்திருக்கிறாய்…. நித்தம் அடிதான் அடிவாங்கி அழுது அப்படியே தூங்கி விட்டாள்….
இரு வாறன் என்று போனவன் தான் பின்பு வரவே இல்லை….பல இரவுகள் கடந்தது எங்கு போனான் என்ன ஆனான் என்று எந்த விபரமும் இல்லை உடையவன் இல்லாட்டி ஒரு முளம் கட்டை என்பார்களே…. அது போல கதவு இல்லாத வீட்டில் கண்ணுறுங்க முடியுமா…விரும்பியது போல பலரின் பார்வை ஊரார் ஊத்தை… என்று ஊரை விட்டே கலைத்தனர் உதவுவதற்கு யாரும் உண்மையாக உறவாட ஆசையுண்டு இருட்டினிலே….
குழந்தையை துக்கி கொண்டு சிறிய துணி மூட்டையோடு புறப்பட்டாள்….. நீண்ட தூரப்பயணம் உடல் பசியால் களைத்துப்போய் கால்கள் இடறின… நா வறண்டு போனது கண்கள் இருட்டியது முடியும் வரை நடந்தால் இவளுக்கே…. இப்படியென்றால் குழந்தைக்கு… எப்படியிருக்கும் கத்தத்தொடங்கினால் ஊரார் பார்வையெல்லாம் இவள் பக்கம் தான் களைத்துப்போய் தூங்கும் தோளில் பிறகு சிறிது நேரம் விழித்துக்கொள்ளும் கதறியலும் தூங்கிவிடும் பசியதிகமாக இடைவிடாமல் கதறியழுதால் நிற்பாட்டவே இல்லை இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை….தானும் சேர்ந்து அழுதாள் அழுது முடியுமா அவள் துயரம்….
கடை கடையாய் ஏறி இறங்கினாள் எவரும் கண்டுகொள்ளவே இல்லை கடைக்கண் பார்வை அவள் வானத்து நட்சத்திரங்கள் போல ஆடையில் உள்ள ஓட்டைகள் வழியே சென்று அவளின் மேனியை மேய்ந்தது அவளுக்கோ நெஞ்சு வெந்து கொண்டு இருந்தது…. அழும் குழந்தைக்கு என்ன செய்வது….. அந்த பெரிய மரநிழலில் என்ன செய்வதென்றே தெரியாமல் வீதியை பார்த்துக்கொண்டிருந்தால் அந்த வழியே ஒருவர் வந்தார் ஐயா தர்மம் பண்ணுங்கள் எனது குழந்தை பசியால் துடிக்கின்றது அவரது காலை பிடித்து அழுதாள் சரி… சரி… நான் பணம் தருகின்றேன் ஆனால்…அங்கு சுற்றும் முற்றும் பார்க்கின்றார்….நான் கேட்பதை நீ… என்ன சொல்;லுங்கள் எதிலியாகிய என்னிடம் என்ன உள்ளது
உன்னிடம்…..வா வாவன் செல்கின்றேன்…. அவளது கையினை பற்றி இழுத்துக்கொண்டு அந்த மரத்தின் பின்னாள் உள்ள பாழடைந்த கட்டிடத்தினுள் சென்றான் கட்டியனைக்க முற்பட்டான் முரண்டு பிடித்தாள் கொஞ்ச நேரம் பணம் தருகின்றேன்…ச்சீ நாயே…த்த்தூ சனியனே…… விடுடா… என்னை பொறுக்கிப்பயலே…மானம்கெட்ட அயோக்கியப்பயலே…இழுபறியில் அவளது சேலை கிழிந்தது ஏற்கனவே முள்ளில் விழுந்த சேலையல்லவா…இதற்கிடையே பிள்ளையின் குரல் எல்லை தாண்டியது பசியின் அகோரம் காதினுள் பேரிடியாய் ஒலித்தது….கண்களில் கண்ணீர் சு10டாககி வெளிவர மரம்போல ஆனாள்…!!! மயங்கிப்போனாள். பிள்ளையின் குரல் கேட்கவே கண்விழிக்கிறாள் மானம் 500 ரூபாய்க்கு பறி முதல் செய்யப்பட்டிருந்தது….
அந்த 500 ரூபாய் அவளது குழந்தையின் அகோரப்பசிக்கு தற்காலிகமாக விடுமுறைகொடுக்க அவளது உள்ளமும் உடலும் மோகத்தினால் களவாடப்பட்டதினை என்னி எரிந்து கொண்டிருந்தது….
திடிரென சத்தம் நிமிர்ந்து பாரக்கிறாள் எதிரே இருவர்….கையில் பல பொருட்களுடன்…..
எரிகின்ற பார்வையால் பார்க்கிறாள்…. போங்கடா நாய்களே….நீங்கலெல்லாம் ஒழுங்கான வயிற்றில் பிறந்தவர்களா ஆண்களா…
ஆம்…ஆம்… நீ மட்டும் சீதையோ உத்தம பத்தினியோ…
இருவரில் ஒருவன் பிள்ளையை பிடுங்குகிறான் என்னுடன் வா இல்லையென்றால் பிள்ளையை கொன்று விடுவேன் தலைகீழாக தொங்க பிடிக்கிறான் அடங்கிப்போகின்றாள் இருவரும் தமது எண்ணத்தினை…….
இரண்டு நான்காகி….. நான்கு எட்டாகி….. நாட்கள் உருண்டோடின மகளும் பெரியவளானால் அவளை நாடியவர்கள் தற்போது அவளது மகளின் மீது தமது பார்வையை வீச ஆரம்பித்தனர்…
அந்த மகளுக்காகவே தன்னை இழந்தவள் இன்று தன் மகளை இழக்க விரும்புவாளா…..!!!
எண்ணிக்கொண்டிருக்கையில் நிறவெறியுடன் ஒருவன் தட்டுகின்றான் கதவை திறக்கின்றாள் பழகிப்போன விடையம் இல்லையென்றால் ஓட்டைப்பிரித்து இறங்கி விடுவார்கள்… வெறியோடு வந்தவன் நீலவேணியைப்பார்த்து ஆஹா ஆஹா என்ன அழகடி நீ…..ஊருக்குள்ள உன்னப்பற்றித்தானே பேச்சு…எத்தனை பெண்களை பார்த்திருக்கின்றேன் உன்னைப்போல் ஒருத்தியைக்காணவில்லை உன்னை
அப்படியே….யாராம்மா அது இந்த நேரத்தில மகள் கலைவாணி வருகிறாள் கலைவாணியைக்கண்டவன் ஆஹா ஆஹா ஒரு அறையில் இரு அழகிய கனிகளா இரண்டையும் சாப்பிடப்போகின்றேன் சொல்லிக்கொண்டே கலைவாணியின் கையைப்பிடிக்கின்றான் டேய் விடுடா என்று திரும்பியவள் திகைத்துப்போனாள்….கைகள் உதறின உடல்முழுவதும் வியர்த்துக்கொட்டியது கண்கள் தீயானது பத்திரகாளியானாள் நீலவாணி….
என் வாழ்க்கையை சீரழித்து என்னை இந்த ஊரே இழிவாகப்பேச நான் அழிந்து கொண்டு இருப்பதே என் மகளுக்காகத்தான்…அவளை நீ…நீ…ச்சீ நாயே என்வாழ்வை சு10னியமாக்கினாய் பத்தாது என்று இன்று என்மகளையே….மூலையில் கிடந்த உலக்கையால் ஓங்கி அறைந்தாள் நிலை தடுமாறி விழுந்தான்…கோபி நாயே இவள் உன்மகளடா….!!! வெறியில் அவன் யாராய் இருந்தால் என்ன…. உன்னைப்போல ஆண்களால் தான் என்னைப்போல பல பெண்கள்….. மீண்டும் உலக்கை அவன் தலையில் வெளியே பாய்ந்தது மூளை…. துடிப்பு அடங்கிப்போனது நீண்ட நாட்களாய் அவள் உள்ளத்தில் எரிந்த நெருப்பு ………
வை- கஜேந்திரன்
"மறுபிறப்பு" சிறுகதை நூலில் இருந்து.
"பசி"
Reviewed by Author
on
September 05, 2018
Rating:

No comments:
Post a Comment