மன்னார் மாவட்டத்திலிருந்து உயர்விருதினை பெற்ற 07சாரணியர்கள்....படங்கள்
மன்னார் மாவட்டத்தில் முதல் முறையாக திரிசாரணியத்தில் உயரிய விருதான பேடன் பவுல் BADEN POWELL AWARED விருதினை 03 திரிசாரணர்கள்- ROVERS பெற்றுள்ளனர்.
.
- S.பெலிக்ஸ் ஜெனிவர்
- C.அனோஜ் குமார்
- A.அமலராஜன்
A.D.S.மேரியன்
P.பிரேம ஜெயந்
L.ஸ்பெல்வின் பெர்ணாண்டோ
A.A.J.அருள்வளன் என்பவரும் பெற்றுள்ளார்.
இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதி தலமை சாரணர் அதிமேன்மை தாங்கிய மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலமையில் கண்டி தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் 20-10-2018
SRI LANKA SCOUT ASSOCSIATION PRESDENT SCOUT AWARED-2018 இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் 1500 சாரணியர்கள் கடமையில் உள்ளனர் அவர்களில் சிலர் முதலே ஜனாதிபதி விருதினை பெற்றுள்ளனர் அத்தோடு திரிசாரணியத்தில் உயரிய விருதான பேடன் பவுல் விருதினை 2018 இம்முறைதான் முதல் தடவையாக 03 திரிசாரணியர்கள் பெற்றுள்ளனர்.இவர்களின் வழிகாட்டிகளாக சாரண ஆசிரியர் திரு .A.இக்னேசியஸ் திரிசாரணியம்.
மன்னார் மாவட்ட உதவி ஆணையாளர் திரிசாரணியம் திரு.பெலின்டஸ் றோய் மன்னார் மாவட்ட ஆணையாளர் அருட்சகோதரர் F.விஜயதாசன் திரிசாரணியம் (அதிபர்-மன்.நானாட்டான் மகாவித்தியாலயம்) மன்.புனித.சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் S.E.ரெஜினோல்ட் இவர்களுக்கும் விருதினைப்பெற்றுக்கொண்ட சாரணியர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
-தொகுப்பு-வை.கஜேந்திரன் -
மன்னார் மாவட்டத்திலிருந்து உயர்விருதினை பெற்ற 07சாரணியர்கள்....படங்கள்
Reviewed by Author
on
October 21, 2018
Rating:

No comments:
Post a Comment