மன்னாரில் ஆல்வார்பிள்ளை அன்ரன் தங்கேஸ்வரன் வெற்றிக் கிண்ணம் உதைபந்தாட்டப் போட்டி
மன்னார் சொக்கோ மாஸ்ரர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உதைபந்தாட்ட கழகத்தின் முக்கியஸ்தராக இருந்த மறைந்த ஆல்வார்பிள்ளை அன்ரன் தங்கேஸ்வரனின் மறைவின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மன்னாரில்மாபெரும் உதைபந்தாட்டப் போட்டிக்கான சகல ஏற்பாடுகளும்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ் போட்டியானது வடக்கு மற்றும் கிழக்கைச் சார்ந்த நாற்பது வயதுக்கு
மேற்பட்ட வயதினருக்கான சுற்றுப் போட்டிகளாக அமைகின்றது.
இவ் போட்டியில் பங்குபற்றும் அணிகள் 50 வயதுக்கு மேற்பட்ட ஒருவரும், 45
வயதுக்கு மேற்பட்ட மூவரும், 40 வயதுக்கு மேற்பட்ட ஐவரும் கட்டாயம்
பங்குபற்றுபவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அணியில் ஒன்பது பேர் கொண்ட குழுவாகவே இவ் போட்டி நடைபெற இருக்கின்றது.
இவ் போட்டியில் வெற்றியீட்டும் முதலாம் இடத்தை பிடிக்கும் குழுவுக்கு
பரிசாக 50 ஆயிரமும் வெற்றிக் கிண்ணமும்.
இரண்டாம் பரிசாக 30 ஆயிரமும் வெற்றிக் கிண்ணமும். ஆத்துடன் சிறந்த
வீரருக்கு 5 ஆயிரமும் சிறிய வெற்றிக் கிண்ணமும், சிறந்த காப்பாளருக்கு
பரிசு பொருளாக 5 அயிரமும் சிறிய வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட
இருக்கின்றன.
இவ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் கழகங்கள் மன்னார் சொக்கோ மாஸ்ரர், வவுனியா சொக்கோ மாஸ்ரர், சீனியர் ஸ்ரார், கிளிநொச்சி சொக்கோ மாஸ்ரர், திருமலை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம், அம்பாரை சொக்கோ மாஸ்ரர், அட்டாளைச்சேனை கழகம், மருதமுனை கழகம், மட்டக்களப்பு கழகம், காத்தான்குடி மற்றும் முல்லைத்தீவு கழகங்கள் இவ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக
இதன் பொறுப்பாளர் கே.ஸ்ரீகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்..
இவ் வாரம் இப்போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுக்ள
மேற்கொண்டிருந்தபொழுதும் கடந்த ஓரிரு தினங்களாக இப்பகுதியில் மழை பெய்துவருவதால் இவ் போட்டிகளுக்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மன்னாரில் ஆல்வார்பிள்ளை அன்ரன் தங்கேஸ்வரன் வெற்றிக் கிண்ணம் உதைபந்தாட்டப் போட்டி
Reviewed by Author
on
October 11, 2018
Rating:

No comments:
Post a Comment