அண்மைய செய்திகள்

recent
-

“வருமுன் காப்போம்”....கறிற்ராஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார்



கறிற்ராஸ்- வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில்
அனர்த்த இடர் முகாமைத்து வபயிற்சி கருத்தமர்வானது 30-10-2018 காலை 9.00 மணியளவில் வாழ்வுதயமண்டபத்தில் கறிற்ராஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்பணிசெ.அன்ரன் அடிகளார் தலைமையில் நடாத்தப்பட்டது.

இக்கருத்தமர்வில் வளவாளராக மன்னார் மாவட்டசெயலகத்தின் மாவட்டஅனர்த்தமுகாமைத்துவ நிலையத்தின் (
DMC) பிரதிப்பணிப்பாளர் திரு.K. திலீபன் அவர்கள் செயற்பட்டார். இப்பயிற்ச்சிகருத்தமர்வினைதலைமையேற்றுநடாத்தியகறிற்ராஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தமது ஆரம்ப உரையிலேயேமேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தமது உரையில் குறிப்பிடுகையில் நாம் கடந்த காலத்தில் பல்வேறு விதமான அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து சொல்லொணாதுன்பங்களை அனுபவித்த மக்கள். இந்தவகையில் இன்று இயற்கையும் எமக்கு சவாலாக உள்ளது.

 இவ்வாறான  இயற்கை அனர்த்தங்களிலிருந்து எம்மைபாதுகாக்கவேண்டு மென்றால் நாம் எம்மைமுதலில் தயார்படுத்திக்கொள்வது அவசியமாகும்.தற்கால சூழலைப்பொறுத்தவரையில் காலநிலை மாற்றங்களும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் ஏராளம் எனவேதான்  நாம் DMCAld இணைந்து
இவ்வாறான விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்க முன்வந்தோம். இதற்கு எமது தலைமைக்காரியாலயமாகவிளங்கும் கறிற்ராஸ்-இலங்கை
SEDEC ஊடாகநிதியினைத்தந்த  Misereor Germany ஸ்தாபனத்திற்கு இன்னேரத்தில் நன்றி கூறுவதோடு தேசிய நிலையத்தின் இயக்குனர் அருட்பணி மகேந்திர குணதிலக்க அடிகளார் அவர்களுக்கும் தேசிய நிலையத்தின் மூத்த நிர்வாக மேலாளர்திரு.தெய்வேந்திரறாஜா.அவர்களுக்கும் நன்றிகளை கூறியதோடுஅனைவரும் இதில் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுக்குமாறும் கேட்டு தமது ஆரம்ப உரையினைநிறைவுசெய்தார்.
இப்பயிற்சியில்குறிப்பாக அனர்த்த இடர் முகாமைத்துவகொள்கைகள் தொடர்பாகவும் எமது பிரதேசத்தில் வரக்கூடிய அனர்தங்களும் அதிலிருந்து எம்மை பாதுகாக்கும் முறைகளும்-அனர்த்த முன்னாயத்த நடைமுறைகள் பற்றியும்-இவ்வாறானஅனர்த்தங்கள் ஏற்படும்போது மக்கள்
DMCAld  எவ்வாறான தொடர்பினை கிராமமட்டங்களிலிருந்து செயற்படலாம் என்பது தொடர்பாகவும் விரிவாக
PowerPoint presentation   மூலமும் குறும்பட காட்சிகள் மூலமும் தெளிவுபடுத்தினார்.
இப்பயிற்சிகருத்தமர்வில் மன்னார் மாவட்டகிராமமட்ட சமூக அமைப்பு  தலைவர்கள்- வாழ்வுதயபணியாளர்கள்  என 85 பேருக்குமேல் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். இப்பயிற்சிகருத்தமர்வானது பிற்பகல் 2.30 மணிவரை நடைபெற்றது. இதில் பங்கெடுத்தவர்களுக்கு கறிற்ராஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்பணிசெ.அன்ரன் அடிகளார் பங்கெடுத்தமைக்கான சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.









“வருமுன் காப்போம்”....கறிற்ராஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் Reviewed by Author on October 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.