அண்மைய செய்திகள்

recent
-

காதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தால் இவ்வளவு பாதிப்புகள் வருமா? -


பொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும் போது, காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்களை குளித்து முடித்ததும் சுத்தம் செய்துவிடுவார்கள்.

சிலருக்கு காதில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்த பிறகு ஏதோ ஒரு புதிய உணர்வு தோன்றியது போலவும், சப்தங்கள் நன்றாக கேட்பது போன்றும் உணர்வார்கள்.

ஆனால், நமது காதில் உண்டாகும் அந்த மெழுகு போன்ற அழுக்கை நீக்க வேண்டாம். ஏனெனில் அதுதான் காதின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக் கூடாது என்பதற்கு என்ன காரணம்?
  • நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருளானது, கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் மூலம் உருவாகிறது.
  • நாம் அனைவரும் அழுக்கு என்று நினைத்து சுத்தம் செய்து அகற்றும் இந்த மெழுகு போன்ற பொருள் தான் நமது காதினை பாதுகாக்கும் காவலனாக இருக்கிறது.
  • நாம் அதிக சப்தம் மற்றும் பாடல்கள் கேட்பதால், நமது காதை அது வலுவாக பாதிக்கும். எனவே அதிக சப்தம் மற்றும் பாக்டீரியா போன்றவற்றிடம் இருந்து நமது காதை காக்கும் தடுப்பானாக இந்த மெழுகு போன்ற பொருள் பயன்படுகிறது.
  • பட்ஸ் அல்லது குச்சி போன்றவற்றை பயன்படுத்தி காதினை சுத்தம் செய்வதால், அந்த மெழுகு போன்ற பொருள் காதின் உட்புறத்தில் கெட்டியாக படர்ந்து பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே இந்த முறையை நாம் முதலில் நிறுத்த வேண்டும்.
  • காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருள் அதிகரிக்கும் போது, காதின் மேல் பகுதியில் வெளிப்புறங்களில் தோன்றும். அப்போது மட்டும் காதின் வெளிப்புறத்தில் ஒரு சிறிய பஞ்சு, துணி, தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.
  • கறிவேப்பிலை குச்சி, தீக்குச்சி போன்ற ஆபத்தான பொருட்களை பயன்படுத்தி நமது காதை சுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால், காதின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான ஜவ்வு பகுதி பாதிக்கப்படுகிறது.

காதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தால் இவ்வளவு பாதிப்புகள் வருமா? - Reviewed by Author on October 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.