மன்னாரில் 'ஈ.பி.ஆர்.எல்.எப்' கட்சியின் நிர்வாக கூட்டத்தில் பல்வேறு விடையங்கள் தொடர்பில் ஆராய்வு-(படம்)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் நேற்று முந்தினம் (14) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும், குறிப்பாக எதிர் வரும் 25 ஆம் திகதி வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைகின்றது.
இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நல்லாட்சி அரசிற்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியது.
ஆனால் வட மாகாண சபை முழுமையாக இயங்க முடியாத நிலை காணப்பட்டது.
எனினும் வடமாகாண சபை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் வெளி வந்துள்ள போதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் பல்வேறு பிரச்சினைகள் எற்பட்டமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும், அவர்களின் விடுதலை குறித்து வழங்கப்பட வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் மக்களுக்கு தெழிவை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எஸ்.றொசேரியன் லெம்பேட்-

குறித்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும், குறிப்பாக எதிர் வரும் 25 ஆம் திகதி வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைகின்றது.
இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நல்லாட்சி அரசிற்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியது.
ஆனால் வட மாகாண சபை முழுமையாக இயங்க முடியாத நிலை காணப்பட்டது.
எனினும் வடமாகாண சபை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் வெளி வந்துள்ள போதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் பல்வேறு பிரச்சினைகள் எற்பட்டமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும், அவர்களின் விடுதலை குறித்து வழங்கப்பட வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் மக்களுக்கு தெழிவை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எஸ்.றொசேரியன் லெம்பேட்-

மன்னாரில் 'ஈ.பி.ஆர்.எல்.எப்' கட்சியின் நிர்வாக கூட்டத்தில் பல்வேறு விடையங்கள் தொடர்பில் ஆராய்வு-(படம்)
Reviewed by Author
on
October 15, 2018
Rating:

No comments:
Post a Comment