மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவுகள் -
மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும்போது முதலில் வலி அதிகரிக்கலாம்.
அத்தகைய மாரடைப்பில் இருந்து முன்கூட்டியே காத்துக் கொள்ள உண்ண வேண்டிய சில முக்கிய உணவுப்பொருட்களைப் பற்றி பார்ப்போம்.
பூண்டு
பூண்டில் உள்ள ஆன்டி-சரஸினோஜெனிக் தன்மை அதிகம் நிறைந்துள்ளதால் இவை மாரடைப்புகளை வராமல் தடுக்கின்றன. எனவே தினமும் உண்ணும் உணவில் அதிக அளவு பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆரஞ்ச்
ஆரஞ்ச் பழத்தில் அதிகம் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இதனை தினமும் அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.திராட்சை
திராட்சையில் எண்ணற்ற அளவில் பிளவானட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது. மேலும் இது மாரடைப்பு ஏற்படுவதை 20 சதவீதம் வரை தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளதால் இவை இதய நலனை பாதுகாக்கிறது. மேலும் உருளைக்கிழங்கு வேக வைத்து சாப்பிடுதலே இதய ஆரோக்கியத்தை பலப்படுத்தும்.தக்காளி
தக்காளியில் உள்ள லிகோபேனி என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. தொடர்ந்து தக்காளி ஜுஸை குடித்தால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.
மாதுளை
மாதுளையில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இருப்பதால் இவை எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.காலே
காலேவில் அதிக அளவில் பொட்டாசியம், நார்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இவை இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்குமாம்.
பாதாம்
வைட்டமின் ஈ நிறைந்துள்ள பாதாம், பிஸ்தா, வால்நட், வேர்க்கடலை போன்றவையும் இதய ஆரோக்கியத்தை காக்குமாம். மேலும், இவை உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்டரோலை குறைக்கும்.
மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவுகள் -
Reviewed by Author
on
October 05, 2018
Rating:
No comments:
Post a Comment