சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க சாப்பிட வேண்டிய உணவுகள் -
அதில் சில குறிப்பிட்ட முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அது நமது உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளையும் பாதிக்கச் செய்கிறது.
எனவே அந்த வகையில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அன்றாடம் நமது வாழ்க்கை மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் சில மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
மஞ்சள்
தினமும் உண்ணும் உணவில் போதுமான அளவு மஞ்சள் சேர்த்து வந்தால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் சிறுநீரகங்களில் ஏற்படும் பிரச்சனைகள் சரிசெய்யும்.தர்பூசணி
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இவற்றை தினமும் சாப்பிடுவதின் மூலம் இவை உடலில் அதிக அளவில் சிறுநீரை உற்பத்தி செய்து கழிவுகளை வெளியேற்றும்.
கொத்தமல்லி
கொத்தமல்லியை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி, அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.எலுமிச்சை ஜூஸ்
தினமும் எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு குறைத்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட பெரிதும் உதவும்.
பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால் இவை சிறுநீரகங்களில் இருந்து யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.ஆப்பிள்
ஆப்பிளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் இவை சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.இஞ்சி
அதிக மருத்துவ குணம் கொண்ட இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்தம் மற்றம் சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டது.
சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க சாப்பிட வேண்டிய உணவுகள் -
Reviewed by Author
on
October 17, 2018
Rating:
No comments:
Post a Comment