அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கற்கை நிலையம்-இலங்கை திறந்த பல்கலைக்கழகம்....மாணவமாணவிகளே

மன்னார் கற்கை நிலையம்-இலங்கை திறந்த பல்கலைக்கழகம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியற் பொறியியல் பட்டப் படிப்புகளுக்குரிய நுழைதகைமை

அடிப்படை பாடநெறிக்கான பாடங்கள்
  •  உயிரியல்    
  • இணைந்த கணிதம்
  • இரசாயனவியல்      
  • பௌதிகவியல்
 இலங்கை திறந்த பல்கலைக்கழகமானது நாட்டின் ஒரு தேசிய முதன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் ஆகும். அது பட்டப்படிப்பு/டிப்ளோமா/சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டங்களையும் மற்றும் ஏனைய பாடநெறிகளையும் திறந்த தொலைக்கல்வி கற்றல் முறை மூலம் வழங்குகின்றது. 
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் விஞ்ஞானத்தில் அடிப்படை பாடநெறிகளுக்கான திறமைச் சான்றிதழ் வழங்குவதன் மூலம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் விஞ்ஞானம் அல்லது பொயிறியல் பிரிவில் பட்டத்தைப் பெறவிரும்பும் ஒருவருக்கு வாய்ப்பை வழங்குகிறது. இலங்கை திறந்த பல்கலைக்கழகம்; பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்ட அனுமதிக்கு தேவையான க.பொ.த உயர்தரத்தில் சித்திகளுக்குப் பதிலாக விஞ்ஞானத்தில் அடிப்படை பாடநெறிகளுக்கு திறமைச் சான்றிதழின் சித்திகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

விஞ்ஞானத்தில் அடிப்படை பாடநெறிகளுக்கான திறமைச் சான்றிதழ்க்கு தேவையான நுழைவுத் தகைமைகள்

• க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் விஞ்ஞானம்   உட்பட ஆகக் குறைந்தது ஆறு (06) பாடங்களில் சித்திகள் அல்லது முதவையினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஏதாவது கல்வித் தகைமை.
• 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

பாடநெறி அமைப்பு

விஞ்ஞானத்தில் அடிப்படை பாடநெறிகளுக்கான திறமைச் சான்றிதழுக்கு வழங்கப்படும் பாடங்கள் 
உயிரியல்இரசாயனவியல்-இணைந்தகணிதம் மற்றும் பௌதிகவியல் என்பனவாகும். மூன்று அடிப்படைப் பாடங்களைப் பூர்த்தி செய்த மாணவர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழக விஞ்ஞானம் அல்லது பொறியியல்; பட்டப்படிப்புக்கான நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பதிவு செய்யத் தகுதியுடையவர்களாவர்.

விஞ்ஞானத் துறையில் பட்டத்தைப் பெறவிரும்பும் மாணவர்கள் அடிப்படைப் பாடநெறிகளில் பௌதிகவியல் மற்றும் இணைந்தகணிதத்துடன் இரசானவியல் அல்லது உயிரியல் பாடங்களைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொறியியல் துறையில் பட்டத்தைப் பெறவிரும்பும் மாணவர்கள் அடிப்படைப் பாடநெறிகளில் பௌதிகவியல் மற்றும் இணைந்தகணிதத்துடன் இரசானவியல் பாடங்களைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

மட்டம் 1 (முதல் வருடத்தை விலக்களித்தல்) பரீட்சை  மற்றும் விலக்களித்தலுக்கான நியதிகள்
க.பொ.த உயர் தரத்தில் பௌதிகவியல் அல்லது விஞ்ஞானத்தில் அல்லது உயிரியல் பிரிவில் கற்றிருப்பின் ஆனால் அதில் சித்தியடையாதிருப்பவர்கள் இலங்கை  திறந்த பல்கலைக்கழகத்தால் நடாத்தப்படும் விலக்களித்தல் பரீட்சைக்கு தோற்ற முடியும் மற்றும் விலக்களித்தல் பரீட்சையில் சித்தியடைந்த பரீட்சார்த்திகள் கீழ் குறிப்பட்டது போல முதலாம் வருட (மட்டம் 1) பாடநெறிகளுக்கு விலக்களிக்கப்படுவர். 

அவர்கள் மட்டம் 2 இனை ஒரு வருட காலத்தினுள் வெற்றிகரமாக பூர்த்திசெய்து விஞ்ஞான மற்றும் பொறியியல் பட்ட படிப்புகளுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினுள் அனுமதிக்கப்படுவர். (பரீட்சைக்கு தோற்றுபவர்கள்  உயிரியல் அல்லது இணைந்தகணிதம்-பௌதிகவியல்  மற்றும் இரசாயனவியலில் 40 புள்ளிகளுக்கு மேல்  பெற்றுக்கொள்ள வேண்டும். 

அவர்கள் ஒரு வருடத்தில் அடிப்படை பாடநெறிகளை பூர்த்திசெய்து இலங்கை திறந்த பல்கலைக்கழக விஞ்ஞானம் அல்லது பொறியியல்,பட்டப்படிப்புக்கான நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பதிவு செய்யத் தகுதியுடையவர்களாவர்). விலக்களித்தல் பரீட்சை இலங்கை திறந்த பல்கலைக்கழக எல்லா பிராந்திய நிலையங்களிலும் மற்றும் கற்கை நிலையங்களிலும் (குளியாபிட்டிய தவிர்ந்த) விலக்களித்தல் பரீட்சை நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • க.பொ.த உயர் தரத்தில்  பொறியியல் தொழில்நுட்பம்   மற்றும்  உயிரியல் முறைமை தொழில்நுட்பம்   பாடப்பிரிவுகளை கற்ற மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

  • அடிப்படை பாடநெறிகளுக்கான வகுப்புக்கள்  இலங்கை திறந்த பல்கலைக்கழக மன்னார்; கற்கை நிலையத்திலும் மற்றும் ஏனைய பிராந்திய கற்கை நிலையங்களிலும் நடைபெறும்.

விண்ணப்பப் படிவங்கள் செப்டம்பர் 30ம் திகதியிலிருந்து ஒக்டோபர் 30ம் திகதி வரை பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்ப படிவ கட்டணம் ரூபா 500/-

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
மன்னார் கற்கை நிலையம்
RDS கட்டிடம்
சிறிய குருமட வீதி 
சாவற்கட்டு
மன்னார்

தொலைபேசி இலக்கம் - 023 2251999.

 தொகுப்பு. வை. கஜேந்திரன்



மன்னார் கற்கை நிலையம்-இலங்கை திறந்த பல்கலைக்கழகம்....மாணவமாணவிகளே Reviewed by Author on October 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.