தமிழகம் முழுவதும் நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்!
தமிழகத்தில் உள்ள 67,654 வாக்குச்சாவடிகளிலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அங்குள்ள அலுவலர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் இருப்பிடச் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதற்காக ரேஷன் கார்டு, வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்பு கணக்கு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
25 வயதுக்கு கீழே உள்ளவர்கள், தங்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டும். இதற்காக பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்றிதழ் அளிக்கலாம். www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்களுக்கு வர இயலாதவர்கள், வரும் 31ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும், வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்த பிறகு புதிய பட்டியலில் சேர்க்கப்படும். புதிய வாக்காளர் பட்டியல் 2019ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும்.
தமிழகம் முழுவதும் நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்!
Reviewed by Author
on
October 07, 2018
Rating:

No comments:
Post a Comment