யூத் ஒலிம்பிக்கில் அசத்திய தமிழக வீரர் சித்திரைவேல்: பதக்கம் வென்று சாதனை -
தஞ்சாவூர் மாநிலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் பிரவீன் சித்திரைவேல். ஏழை குடும்பத்தை சேர்ந்த சித்திரவேலின் தந்தை, பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் கீழ் பயிற்சி பெற்று வரும் சித்திரைவேலுக்கு 8 வயது முதலே இந்திரா சுரேஷ் என்பவர் சிறப்பு பயிற்சி கொடுத்து வருகிறார்.

உலகின் மிகப்பெரிய மேடையில் பதக்கம் வாங்க வேண்டும் என்பதுவே சித்திரவேலின் சிறுவயது கனவாகும்.
இந்த நிலையில் அர்ஜென்டினாவில் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் பிரிவு டிரிபுள் ஜம்ப்பில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த சித்திரைவேல் 31.52 மீட்டர் தூரம் தாண்டி மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.
சித்திரவேலுக்கு இது முதல் பதக்கமாக இருந்தாலும், தன்னுடைய சிறுவயது கனவு நனவாகியுள்ளதாக பெருமை தெரிவித்துள்ளார்.

யூத் ஒலிம்பிக்கில் அசத்திய தமிழக வீரர் சித்திரைவேல்: பதக்கம் வென்று சாதனை -
Reviewed by Author
on
October 19, 2018
Rating:
No comments:
Post a Comment