அண்மைய செய்திகள்

recent
-

நுரையீரல் ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!


உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு நுரையீரலாகும். புகைப்பிடிப்பது, காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் வசிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுடன், வேறு சில நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, காச நோய், எம்பிஸிமா போன்றவைகளாலும் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதை வெளிகாட்டும் முக்கிய அறிகுறிகள்
தொடர் இருமல்
சுவாச பாதையில் எரிச்சலூட்டுபவைகள் மற்றும் சளிகள் இருந்தால், அவற்றை வெளியேற்றுவதற்காக வருபவை தான் இருமல். இந்த இருமலானது ஒருவருக்கு பல நாட்களாக இருந்தால், நுரையீரல் முறையாக செயல்படுவதில்லை என்று அர்த்தம்.

மூச்சுத் திணறல்
அன்றாட வேலைகளை செய்யும் போது ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அவரின் நுரையீரலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். மூச்சுத்திணறலானது மூச்சுக்குழாயில் ஏற்படும் சில வகையான அடைப்புக்களாலும் ஏற்படலாம்.
அதிக சளி
சளியானது கிருமிகள், அழுக்குகள், தூசிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு நுரையீரலினுள் செல்ல உதவி புரியும்.இத்தகைய சளியின் உற்பத்தி அதிகமாகும் போது, ஒருவருக்கு இருமல் மிகவும் கடுமையாக இருக்கும்.

கால் வீக்கம்
நுரையீரல் சரியாக செயல்படாத போது உடலுறுப்புகளுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இந்நிலையில் உடலினுள் உள்ள திரவங்களும் கோர்த்துக் கொள்வதால் கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படும்.
காலை தலைவலி
நுரையீரல் பிரச்சனைகளுள் ஒன்றான நாள்பட்ட நுரையீரல் நோய் இருந்தால் காலையில் எழுந்ததும் திடீரென்று தலைவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்படும். இதற்கு காரணம் தூக்கத்தின் போது சரியாக சுவாசிக்க முடியாமல் உடலினுள் கார்பன்டைஆக்ஸைடு அதிகளவு சேர்வது தான்.

உடல் சோர்வு
தூங்கி எழுந்த பின்னரும் மிகுதியான சோர்வு அல்லது அதிகப்படியான களைப்பை உணர்ந்தால், நமது உடலில் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம். அது நுரையீரலில் பிரச்சனையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
எப்போது நுரையீரல் சரியாக வேலை செய்யாமல் உள்ளதோ, அப்போது உடலினுள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, உடலின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு உடல் மிகுந்த களைப்பாக இருக்கும்.

நுரையீரல் ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! Reviewed by Author on October 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.