12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சாக்களை தயாரித்து கின்னஸ் சாதனை!
ப்யூனஸ் அய்ர்ஸ் நகரில் உலக சாதனை நிகழ்த்துவதற்காக சுமார் 400 சமையல் கலைஞர்கள் ஒன்று கூடினர். அவர்கள் அனைவரும் இணைந்து அதிக எண்ணிக்கையிலான பீட்சாக்களை, 12 மணிநேரத்தில் தயார் செய்ய ஆரம்பித்தனர்.
இதற்காக 3,000 கிலோ மாவு, 3,100 கிலோ தக்காளி சாஸ், 150 லிட்டர் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பீட்சாவும் சுமார் 12 அங்குல விட்டத்தில் இருக்கும் விதிப்படி தயாரிக்கப்பட்டன.
இறுதியில் 11,000 பீட்சாக்கள் 12 மணிநேரத்தில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு இத்தாலியில் 10,065 பீட்சாக்கள் உருவாக்கப்பட்டதே சாதனையாக இருந்து வந்த நிலையில், இந்த சாதனை அதனை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது.
இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பீட்சாக்கள் அனைத்தும் விற்கப்பட்டு, அதில் கிடைத்த தொகை உள்ளூர் அறக்கட்டளை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சாக்களை தயாரித்து கின்னஸ் சாதனை!
Reviewed by Author
on
November 13, 2018
Rating:

No comments:
Post a Comment