12,000 பிணங்களுடன் ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் சூறையாடப்பட்டவர்களின் 200 சவக்குழிகள் கண்டுபிடிப்பு -
அவற்றில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உடல்களும் அடக்கம். அவை ஈராக்கின் பல பகுதிகளை ஐ.எஸ் ஆண்ட காலகட்டமான 2014 முதல் 2017 வரை கொல்லப்பட்டவர்களின் உடல்களாகும்.
தாங்கள் ஆண்ட காலத்தில் ஈராக், அருகிலுள்ள சிரியா போன்ற இடங்களில் வலம் வந்த ஐ.எஸ் அமைப்பினர் கூட்டம் கூட்டமாக பாதுகாப்பு படையினரைக் கொலை செய்ததோடு, Yazidi இன பெண்களையும் சிறுமிகளையும் அடிமைகளாக பிடித்துச் சென்றனர். 400,000 Yazidi இனத்தவர்கள் வாழ்ந்த Sinjar பகுதி 2014ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.எஸ் அமைப்பினரால் சூறையாடப்பட்டது.
அவர்களில் 5000 பேர் மிருகங்களைப்போல் கொல்லப்பட்டதோடு இன்னும் 5000 பேர் பாலியல் அடிமைகளாக பிடித்துச் செல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சுமார் 1,700 ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். Salahuddin பகுதியில் பல இடங்களில் அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவர்களில் பலர் அவசர அவசரமாக புதைக்கப்பட்டதோடு சிலரது உடல்கள் டைகிரிஸ் நதியில் வீசப்பட்டன.
சில இடங்களில் மண்ணைத் தோண்டி புதைப்பதற்கு பதிலாக கிணறுகளிலும் குழிகளிலும் உடல்கள் வீசப்பட்டன. இதுவரை 28 குழிகளிலிருந்து, கொல்லப்பட்ட 1,258 பேரின் உடல்களை ஈராக் அதிகாரிகள் மீட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உடல்களை பதப்படுத்தி, அடையாளம் கண்டு, இறந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்பதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கவும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
12,000 பிணங்களுடன் ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் சூறையாடப்பட்டவர்களின் 200 சவக்குழிகள் கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
November 08, 2018
Rating:

No comments:
Post a Comment