திருமண ஆசையை வெளியிட்ட 12 வயது சிறுமி: நெஞ்சை உலுக்கும் காரணம் -
யேமன் நாட்டில் ஒருவேளை உணவுக்காக பெண்களும் சிறார்களும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரான சுகைனா பகிர்ந்துள்ள கருத்துகள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.
இரவில் தமது மகனை அணைத்தபடி படுத்துறங்கும்போது, ஒரு நாள் ஒரு ஏவுகணை அல்லது வெடிகுண்டு தங்களது குடியிருப்பின் மீது பதிக்கலாம் என தனக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் பலர் சொத்துக்களும் குடியிருப்புகளும் இழந்துள்ளனர். வாழ்க்கையில் அதுவரை சம்பாதித்த அனைத்தும் இழந்து தெருவீதியில் தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களது பிள்ளைகள் குடிநீருக்காக வாய்விட்டு கதறுகின்றனர். பல சிறுவர்கள் பட்டிணி மற்றும் நோயால் அவதிப்படுகின்றனர்.
மருந்தும் உணவும் இன்றி ஒவ்வொரு நிமிடமும் அந்த சிறார்கள் நரக வேதனை அனுபவிக்கின்றனர்.
ஆனால் அவர்களின் மருந்துக்கும் உணவுக்குமான பணத்தை அரசாங்கம் போருக்காக செலவிடுகின்றது என்பது தான் கொடுமை.
யேமனில் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தமக்கு பிள்ளை பிறந்ததாக கூறும் சுகைனா, மகன் நடக்கத் துவங்கியபோது அண்டை விட்டாரின் 5 வயது சிறுவன் பட்டினியால் மரணமடைந்துள்ள தகவல் தம்மை உலுக்கியது என்றார்.
ஒருமுறை தெருவோரம் சந்தித்த 12 வயது யேமன் சிறுமியிடம், தற்போதைய நிலையில் ஆசை என்ன என வினவியபோது,
அந்த சிறுமி தெரிவித்த பதில் தம்மை கடுமையாக பாதித்ததாக சுகைனா பதிவு செய்துள்ளார்.
அந்த 12 வயது சிறுமி தமக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதாகவும், அப்போதுதான் தமக்கு மதியம் சிக்கன் உணவு சாப்பிட முடியும் என தெரிவித்துள்ளார்.
திருமண ஆசையை வெளியிட்ட 12 வயது சிறுமி: நெஞ்சை உலுக்கும் காரணம் -
Reviewed by Author
on
November 29, 2018
Rating:

No comments:
Post a Comment