ஒரே டெஸ்டில் 14 விக்கெட்டுகள்: ஜாம்பவானின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது கடந்த 1982ஆம் ஆண்டு, இலங்கைக்கு எதிரான போட்டியில் இம்ரான் கான் 116 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் 14 விக்கெட்டுகளை ஒரு டெஸ்டில் வீழ்த்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இந்நிலையில், 36 ஆண்டுகளுக்கு பிறகு யாசிர் ஷா 184 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

ஒரே டெஸ்டில் 14 விக்கெட்டுகள்: ஜாம்பவானின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர்!
Reviewed by Author
on
November 29, 2018
Rating:
No comments:
Post a Comment