மன்னார் மறைமாவட்டத்தில் மறைக்கல்விப் பரீட்சைகள்.175 நிலையங்களில் 11750 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
மன்னார் மறைமாவட்டத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்கான மறைக்கல்வி பரீட்சை இன்று சனிக்கிழமை (03.11.2018) நான்கு மறைக்கோட்டங்களிலும் நடைபெறுகின்றது.
மன்னார் மறைமவட்டத்தில் 46 பங்குகளில் மடுவைத் தவிர ஏனைய பங்குகளில் கற்கும் மறைக்கல்வி மாணவர்களுக்கான வருடாந்த பரீட்சையே இன்று சனிக்கிழமை நடைபெறுகின்றது.
மன்னார் மறைக்கல்வி இயக்குனர் அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளாரின்தலைமையில் நடைபெறும் இவ் பரீட்சையில் முருங்கன் மறைக் கோட்டத்தில் 42நிலையங்களில் 2300 மாணவர்களும், மன்னார் மறைக் கோட்டத்தில் 25நிலையங்களில் 4700 மாணவர்களும், மடுமறைக்கோட்டத்தில் 33 நிலையங்களில்1850 மாணவர்களும், வவுனியா மறைக்கோட்டத்தில் 75 நிலையங்களில் 2900மாணவர்களும் இவ் பரீட்சையில் தோற்றுகின்றனர்.
காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் இவ் பரீட்சையில் 1400 மறை ஆசிரியர்களும் பாடசாலையில் கற்பிக்கும் கத்தோலிக்க பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களும் கடமையில் ஈடுபடுவர் என மன்னார் மறைக்கல்வி இயக்குனர் அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார் தெரிவித்தார்.
இவ் பரீட்சைகள் முடிவுற்றதும் பரீட்சைத் தாள்கள் திருத்தும் பணிகள்
மன்னார் புனித சவேரியார் பெண்கள் பாடசாலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்
கிழமை (04.11.2018) மற்றும் எதிர்வரும் செவ்வாய் கிழமை 6 ந் திகதி ஆகிய
இரு தினங்கள் நடைபெற இருக்கின்றன.
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க அனுசரனையுடன் பாடசாலைகளில் கத்தோலிக்க சமயம் கற்பிக்கும் ஆசிரியர்களாலும் கத்தோலிக்க பாட ஆலோசகர்களாலும் பரீட்சைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
November 03, 2018
Rating:

No comments:
Post a Comment