26 அடி நீள பிரம்மாண்ட புழு! ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள் -
நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஹாத்வே(56), ஆண்ட்ரூ பட்லே(48) ஆகியோர் எரிமலையால் உருவான வெள்ளைத் தீவு பகுதியில் உள்ள கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது வழுவழுப்பான நிலையில் வெள்ளை நிறத்துடன் கூடிய பிரம்மாண்ட புழு ஒன்றை அவர்கள் கண்டனர். அந்த புழு சுமார் 26 அடி நீளத்துடன், தலைப்பகுதி தட்டையாகவும், முட்கள் போன்ற அமைப்புடனும் காணப்பட்டது.
இந்த புழுவின் வாய்ப்பகுதியில் முட்களுடனும் காணப்பட்டதால், ஜெல்லி மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாக இது இருக்கலாம் என்கிற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தண்ணீரில் நடுங்கியபடி, மெதுவாக இந்த புழு சுழன்று நீந்தும் வீடியோவை அவர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்து ஸ்டீவ் ஹாத்வே கூறுகையில்,
‘இது போன்ற ஒரு உயிரினம் இருந்ததைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. இது குறித்து வீடியோ காட்சிகளையோ அல்லது ஒரு புகைப்படத்தை கூட ஒருபோதும் பார்த்ததில்லை. இதனை காணும் பொழுது என் கண்களை என்னாலேயே நம்பமுடியாத வகையில் இருந்தது’ என தெரிவித்துள்ளார்.
26 அடி நீள பிரம்மாண்ட புழு! ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள் -
Reviewed by Author
on
November 14, 2018
Rating:

No comments:
Post a Comment