அண்மைய செய்திகள்

recent
-

இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக்!


இந்தோனேசிய கடலில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கபோடா தீவில் உள்ள நேஷனல் பார்க் கடற்கரையில் பெரிய திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கி இருக்கிறது.

இந்த திமிங்கலத்தை கரைக்கு எடுத்து வந்த அதிகாரிகள் பின் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர், வயிறு கிழிக்கப்பட்டு சோதனை செய்ததில், வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த திமிங்கலத்தின் வயிற்றில் கடினமான பிளாஸ்டிக் 19, பிளாஸ்டிக் பாட்டில் 4, பிளாஸ்டிக் பேக் 25, செருப்புகள் 2, பிளாஸ்டிக் கயிறுகள் 3.26 கிலோ, பிளாஸ்டிக் கப் 115 இருந்துள்ளது. இது எல்லாமும் அதன் குடலில் சிக்கி இருந்துள்ளது. எந்த பொருளும் செரிமானம் அடையவில்லை.
இந்த சம்பவத்திற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சட்ட போராட்டம் செய்ய போவதாகவும் கூறியுள்ளனர்.
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக்! Reviewed by Author on November 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.