அண்மைய செய்திகள்

recent
-

இந்த நகரத்தில் 7 பேரில் ஒருவர் மில்லியனர் தெரியுமா...........


சீனாவின் கேட்வே என அறியப்படும் ஹாங்காங் நகரத்தில் குடியிருக்கும் 7 பேரில் ஒருவர் மில்லியனர் என்று வெல்த் எக்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகப் பணக்கார நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள ஹாங்காங் நகரம், இதுவரை இந்தப் பட்டியலில் முதலிடத்தை அலங்கரித்துவந்த நியூயார்க் நகரை பின்னுக்கு தள்ளியுள்ளது.
நியூயார்க் நகரத்தில் 9 ஆயிரம் மில்லியனர்கள் குடியிருக்கிறார்கள் என்றால் ஹாங்காங் நகரில் 10,000 மில்லியனர்கள் வாழ்வதாக ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள்.
ஒட்டுமொத்தமாக 74 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில் வாழும் 7 பேரில் ஒருவர் மில்லியனர் என்று வெல்த் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1997 ஆம் ஆண்டு வரை ஹாங்காங் பிரித்தானியா வசம் இருந்தது. அதனால், சீனாவின் எஞ்சிய நகரங்களிலிருந்து ஹாங்காங் சற்று வேறுபடும்.
மேற்கத்தியக் கலாசாரம் மேலோங்கிக் காணப்படும் இந்த நகரம் தற்போது சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டாலும் தனி அந்தஸ்துடன்தான் உள்ளது.
ஆசியாவின் 50 பில்லியனர்களில் 9 பேர் ஹாங்காங் நகரத்தில் வசிக்கின்றனர். ஹாங்காங்கைச் சேர்ந்த 50 பில்லியனர்களின் மொத்தச் சொத்து மதிப்பு 235 பில்லியன் பவுண்டுகள்.

2017 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு 13 சதவிகிதம் மில்லியனர்கள் இந்த நகரத்தில் அதிகரித்துள்ளனர்.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் மந்த நிலை காரணமாக நியூயார்க் நகருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் நகரங்கள் பட்டியலில் டோக்கியோவுக்கு 3-வது இடம். லாஸ் ஏஞ்சலீஸ், பாரீஸ், லண்டன், சிகாகோ, சான் ஃபிரான்ஸிஸ்கோ, வாஷிங்டன், ஒசாகா நகரங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பெறுகின்றன.

அமெரிக்காவில் 80,000 பெரும் பணக்காரர்கள் வசிக்கின்றனர். சீனாவில் 17,000 பெரும் பணக்காரர்கள் உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

இந்த நகரத்தில் 7 பேரில் ஒருவர் மில்லியனர் தெரியுமா........... Reviewed by Author on November 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.