மன்னார் அருட் சகோதரி வெர்ஜினியாவின் நினைவேந்தல் நிகழ்வு---படங்கள்
மன் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் அதிபராக 1985 தொடக்கம் 1995 வரை 10 வருடங்கள் கடமையாற்றி சுகயீனம் காரணமாக மரணம் அடைந்த அருட் சகோதரி வெர்ஜினியா குரூஸ் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு 20-11-2018 காலை 10.30 மணியளவில் மன்னார் மன் புனித சவேரியார் பெண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்ப்பாட்டில் அதிபர் அருட் சகோதரி கில்டா சிங்கராஜ தலைமையில் இடம் பெற்றது.
யுத்த காலப்பகுதியில் மன்னார் மாவட்டதில் வங்காலை மற்றும் மன் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலைகளில் பணியாற்றிய சகோதரி வெர்ஜினாவின் நினைவேந்தல் தினமானது அவரிடம் கல்வி கற்ற மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடை பெற்றது
இன்றைய நிகழ்வில் முன்னாள் மன்னார் வலயகல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்டியான் அருட் சகோதரர் சேவியர் குரூஸ் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி டியூக் குரூஸ் உட்பட அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இறை பதம் அடைந்த சகோதரி வெர்ஜினியாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
அருட்சகோதரி வெர்ஜினியா அதிபராக மாத்திரம் அன்றி மன்னார் மாவட்டத்தில் இயங்கிவந்த பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
November 21, 2018
Rating:

No comments:
Post a Comment