'என் இதயம் பேசுகிறது' நூல் வெளியீட்டு விழா.....
ஈழத்தின் யாழ்ப்பாணம் புங்குடுதீவினைச் சேர்ந்த இளைய படைப்பாளி புங்குடுதீவு டயான் எழுதிய 'என் இதயம் பேசுகிறது' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 18.11.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் ஆரம்பமானது. நிகழ்வுக்கு யோ.புரட்சி தலைமை வகித்தார். சட்டத்தரணியும் வடமாகாண ஆளுநரின் செயலாளருமாகிய இ.இளங்கோவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். நூலினை 'கதிர்வசந்தம்' ஆக்கியிருந்தது. வெளியீடு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம்.
அறிவிப்பாளரும் படைப்பாளருமான யாழ்.சபேசன் நிகழ்ச்சிகளை தொகுத்தளிக்க, முன்னதாக விருந்தினர்கள் வரவேற்பு இடம்பெற்றது. தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டன. வரவேற்பு நடனத்தினை 'தாயகம்' அமைப்பின் மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆசிரியர் ஜெ.பிரியா வழங்கினார். ஆசியுரையினை புங்குடுதீவு புனித சவேரியார் தேவாலய பங்குத்தந்தை அருட்பணி செ.செபஜீவன் அடிகளார் வழங்கினார்.
தலைமையுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். நிகழ்வில் யாழ்.மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர் சி.முருகானந்தவேல், தீவக கல்வி வலயத்தின் அழகியற் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் மலர்விழி கனகசபை, வட இலங்கை சர்வோதயம் அறங்காவலர் பொ.ஜமுனாதேவி, தீவக கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப்பிரிவு ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.கணபதி, இலண்டன் 'உதவும் கரங்கள்' அமைப்பின் சார்பாக ஏரம்பு வசந்தகுமாரன் ஆகியோர் நூலாசிரியருக்கான வாழ்த்துதல் அளித்தனர்.
நூலினை நிகழ்வின் சிறப்பு அதிதி யாழ்.மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர் சி.முருகானந்தவேல் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை சிவா நறுமணப் பூங்கா உரிமையாளர் து.குருநாதசிவம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் நூற்பிரதிகள் வழங்கப்பட்டன. மாணவி கலைநிலா இசை அளித்தார்.
நூலின் ஆய்வுரையினை புங்குடுதீவு மகா வித்தியாலய ஆசிரியர் பாலகுமாரன் நிகழ்த்தினார். பிரதம அதிதி உரையினைத் தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியர் புங்குடுதீவு டயான் வழங்கினார்.
நன்றியுரையினை தொண்டர் திருநாவுக்கரசு முன்பள்ளி ஆசிரியை தி.அனிஷா வழங்கினார்.
கொ.பிலிஸ்ரன்ராஜ் எனும் இயற்பெயருடைய புங்குடுதீவு டயான் நாடகம் உள்ளிட்ட துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
November 20, 2018
Rating:

No comments:
Post a Comment