சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட குத்துச்சண்டை வீரர் அதிர்ச்சி மரணம்!
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் மரியோ மெலோ(56). இவர் 1980 மற்றும் 90களில் தென் அமெரிக்காவின் Heavy Weight சாம்பியனாக திகழ்ந்தவர். இந்நிலையில், அர்ஜெண்டினாவின் ‘மிடியாலுனா’எனும் பாரம்பரிய இனிப்புப் பண்டத்தை சாப்பிடும் போட்டியில் மரியோ கலந்துகொண்டார்.
போட்டி நடந்துகொண்டிருந்தபோது மரியோவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் போட்டி நடத்துபவரிடம் உதவி கேட்டு கோபமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் அவரது பின்புறம் சரிந்து விழுந்துவிட்டதால், பார்வையாளர்களிடம் இருந்து மருத்துவர் ஒருவர் வரவழைக்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு மரியோ கொண்டு செல்லப்பட்டார்.
அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக அவரது சகோதரி ஆயிடா மெலோ தெரிவித்துள்ளார்.

சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட குத்துச்சண்டை வீரர் அதிர்ச்சி மரணம்!
Reviewed by Author
on
November 07, 2018
Rating:
No comments:
Post a Comment