பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா -
சிரேஸ்ட ஊடகவியலாளர் பிறேம் தலைமையில் மாலை 6.00 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஈகைச்சுடருடன் ஆரம்பமான நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவீரர் திருவுருவப் படத்திற்கான அஞ்சலியை விடுதலை போராட்ட முன்னோடி சத்தியசீலன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
மலர் வணக்கத்தை தொடர்ந்து வரவேற்புரையினை யபர்ணா நிகழ்த்தினார். பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுக உரையினை தமிழாய்வு மையத்தின் இயக்குனர்களில் ஒருவரும் ஆய்வாளருமான தி.திபாகரன் நிகழ்த்தினார். சிறப்புரைகளை கெளரிபரா, சிவரதன், வேணி சதீஸ், பாலகிருஸ்ணன் ஆகியோர் நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராஜா நிகழ்த்தி நூலை வெளியிட சிறப்புப் பிரதியை வைத்தியக் கலாநிதி போராளி வாமன் பெற்றுக்கொண்டார்.
விமர்சன உரைகளை சேனா முத்தையா, சிறீதரன், பேராசிரியர் புவனேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர். ஏற்புரையினை நூலாசிரியர் அரசறிவியலாளர் மு திருநாவுக்கரசு இணைய காணொளி மூலம் நிகழ்த்தியதோடு, சபையோர் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.
இறுதியாக தமிழாய்வு மையத்தின் சார்ப்பில் ஊடகவியலாளர் அ.மயூரனின் நன்றியுரை இடம்பெற்றுள்ளது.
பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா -
Reviewed by Author
on
November 13, 2018
Rating:

No comments:
Post a Comment