ரணிலை காப்பாற்றி! பதவியை பாதுகாப்பதற்கு திட்டம் தீட்டும் சம்பந்தன் -
யாழ்.ஊடக அமையத்தில் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனிடம் மூன்றரை வருடங்கள் எதிர்கட்சி தலைவர் பதவியை வைத்திருந்து தமிழ் மக்களுக்கு என்ன சாதித்தீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இரா.சம்பந்தன் அந்த பதவிக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளார்.
அவருடைய இந்த கருத்து அபத்தமானது. இரா. சம்பந்தன் அவ்வாறான கருத்தினை கூறுவது பேரினவாதிகளை திருப்திப்படுத்துவதற்கும், அதன் ஊடாக தமது பதவிகளை பாதுகாத்து அந்த பதவிகள் ஊடாக கிடைக்கும் சுகபோகங்களை அனுபவிப்பதற்குமேயாகும்.
அவ்வாறான பதில் ஊடாக தாங்கள் கடந்த மூன்றரை வருடங்களில் தமிழ் மக்களுக்கு ஒன்றையுமே செய்யவில்லை என்பதை மூடி மறைப்பதற்குமே முயற்சிக்கப்படுகின்றது.
மேலும் ஐ.தே.கட்சிக்கு அல்லது ரணிலுக்கு பிரச்சினை என்றவுடன் இன்று நாடாளுமன்றில் கூச்சலிடுகிறார்கள். நீதிமன்றுக்கு செல்கிறார்கள்.
நாங்கள் கேட்கிறோம் போருக்கு பின்னரான 9 வருடங்களில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள். குறிப்பாக காணி பிரச்சினை, சிங்கள குடியேற்ற பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, காணாமல்போனவர் பிரச்சினை என பல பிரச்சினைகளை சந்தித்தார்கள், இன்றும் சந்தித்து கொண்டிருக்கின்றார்கள்.
அவற்றுக்காக இந்த கூட்டமைப்பு இதுவரையில் ஒரு தடவையாவது நாடாளுமன்றில் இன்று பேசுவது போல் பேசியிருக்கின்றதா?
இன்று ரணிலை காப்பாற்றுவதற்கு நீதிமன்றம் சென்றதுபோல் நீதிமன்றம் சென்றுள்ளதா? ஆகவே ரணில் என்ற தனி நபரை காப்பாற்றுவதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துடித்துக் கொண்டிருக்கின்றது.
இதேவேளை, அதன் ஊடாக அவர்கள் எதிர் கட்சி தலைவர் பதவி, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவி போன்றவற்றை பாதுகாத்துக் கொண்டு அதன் ஊடாக கிடைக்கும் சுகபோகங்களை அனுபவிக்க நினைக்கிறார்கள் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலை காப்பாற்றி! பதவியை பாதுகாப்பதற்கு திட்டம் தீட்டும் சம்பந்தன் -
Reviewed by Author
on
November 22, 2018
Rating:

No comments:
Post a Comment