கெழும்பு அரசியல் குழப்பங்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள தீர்வு யோசனை! -
அவுஸ்ரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் Victoria Coakley உடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே சி.வி.விக்னேஸ்வரன் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இன்றைய சந்திப்பின் போது அண்மை காலமாக மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை பற்றியும் வடமாகாணத்தின் அரசியல் நிலை பற்றியும் இருவரும் பேசியிருந்தனர்.
இதன் போது மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்டுள் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் சி.வி.விக்னேஸ்வரன் அவுஸ்ரேலியா பிரதி உயர்ஸ்தானிகரிடம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மகிந்த ராஜபக்சவுடன், ரணில் அவர்கள் ஒரு கூட்டு அரசாங்கத்திற்கான உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு நாட்டின் முக்கிய பிரச்சினைகளை இருவரும் தீர்க்க முன்வரலாம் என அவர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கெழும்பு அரசியல் குழப்பங்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள தீர்வு யோசனை! -
Reviewed by Author
on
November 22, 2018
Rating:

No comments:
Post a Comment