அண்மைய செய்திகள்

recent
-

தமிழகம் போர்க்களமாக மாறும்: எச்சரிக்கை விடுத்த சீமான் -


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கால் நூற்றாண்டுகளாக சிறையில் வதைப்படும் தமிழர்களை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
இந்த ஏழு பேரின் விடுதலை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் நெடுநாள் கனவு. 12 கோடி தமிழர்கள் மீதும் சுமத்தப்பட்டக் களங்கத்தைத் துடைப்பதற்கான வரலாற்று வாய்ப்பு.

அதற்காக நாம் கொடுத்த விலையும், பட்ட துயரும் மிக மிக அதிகம். 25 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணில் நடந்தப் பல்வேறு போராட்டங்கள்,
பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கருத்துப் பரப்புரைகள், அரசியல் அழுத்தங்கள், சட்டப்போராட்டங்கள், செங்கொடியின் உயிரீகம் எனப் பல அசாத்தியப் போர்க்களங்களைக் கண்டே இன்றைக்கு ஏழு பேரின் விடுதலையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.
பொதுவாக ஆயுள் தண்டனைக் கைதிகளை 14 ஆண்டுக் காலத்திலேயே நன்னடத்தின் அடிப்படையில் விடுதலைசெய்வதற்குச் சட்டத்தில் இடமிருக்கிறது.

ஆனால், ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கிற ஏழு பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைக்குள் அடைப்பட்டுக்கிடக்கிறார்கள் என்பது அப்பட்டமான மனிதவதை.
தனிமனிதக் காழ்ப்புணர்ச்சிக்கும், அரசியல் பழிவாங்குதல் போக்குக்கும் இரையாக்க முனையும் கொடுஞ்செயலைப் புரிவது ஏற்கமுடியாத மனித உரிமை மீறல்.

ஆளுநர் முடிவெடுப்பதற்குரிய காலக்கெடு எதுவும் சட்டத்தில் குறிப்பிடப்படாததால் அதனையே சாதகமாகக் கொண்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் எத்தகைய முடிவையும் எடுக்காது ஆளுநர் காலங்கடத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

கோடி மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற ஓர் அரசின் முடிவை ஆளுநர் அலட்சியப்படுத்துவது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கும் படுபாதகச்செயல் என சீமான இந்த விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழகம் போர்க்களமாக மாறும்: எச்சரிக்கை விடுத்த சீமான் - Reviewed by Author on November 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.