மன்னார் நகர சபையில் நடப்பது என்ன???மக்களின் கருத்தை அறியாது நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம்? S.R.குமரேஸ்
மன்னார் நகர சபையில் நடப்பது என்ன? வாக்களித்த மக்களிடம் கருத்தை கேட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
-இவ்விடையம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
மன்னார் நகர சபையின் 9 ஆவது அமர்வு கடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற போது 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சபையில் முன் வைக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளது.
சபையில் நிறைவேற்றப்பட்ட வரவு செலத்திட்டம், சபையில் முன் மொழியப்பட்டு, நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் மன்னார் நகர மக்களின் பார்வைக்கு காட்சிப் படுத்தப்பட்டதன் பின்னரே சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
-ஆனால் கடந்த 21 ஆம் திகதி மன்னார் நகர சபையில் இடம் பெற்ற மாதாந்த அமர்வின் பின் மாலையில் திடீர் என இடம் பெற்ற கூட்டத்தில் 2019 ஆம் அண்டுக்கான வரவு செலவு திட்டம் முன் மொழியப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-எனினும் சபையில் முன் மொழியப்பட்டு, சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தற்போது மக்களின் பார்வைக்காக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
-எனவே மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள குறித்த வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் தமது கருத்துக்களை முன் வைத்து திருத்தங்கள் ஏற்படும் பாட்சத்தில் குறித்த திருத்தம் மக்களின் சுட்டிக் காட்டுதல்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் குறித்த வரவு செலவுத் திட்டத்தின் திருத்தம் மக்களின் திருத்தமா? அல்து சபையினுடைய திருத்தமா? என்பதனை தலைவர் தெழிவு படுத்த வேண்டும்.
எனவே மன்னார் நகர சபை எதற்காக உள்ளது என்பதனை மன்னார் நகர சபையின் தலைவர் தெழிவு படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையில் நடப்பது என்ன???மக்களின் கருத்தை அறியாது நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம்? S.R.குமரேஸ்
Reviewed by Author
on
November 30, 2018
Rating:

No comments:
Post a Comment