எமது இனத்தை அழித்த ஒருவருக்கு ஆதரவளிக்க முடியாது! சிறீதரன் எம்.பி திட்டவட்டம் -
வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு இன்று இடம்பெற்றது.
இதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தமிழர்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் அகிம்சை வழியில் போராடினார்கள் அதன் பின்னர் ஆயுத ரீதியில் போராடினார்கள். மாறி மாறி வருகிற ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழர்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். ஜெயவர்த்தனா தொடக்கம் பிரேமதாசா சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன போன்ற அரச தலைவர்கள் வரை தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றியே வந்திருக்கிறார்கள்.
அவர்கள் இருவருமே எமது பிரச்சினையை இதயசுத்தியுடன் அணுகவில்லை எமது தமிழ் மக்கள் வாக்களித்த ஜனாதிபதி எந்த நம்பிக்கையில் அவர்கள் வாக்களித்தார்களோ அதே நம்பிக்கைக்கு ஜனாதிபதி துரோகம் இழைத்திருக்கிறார்.
இதேவேளை, இளைஞர்களை யார் காணாமல் போக வைத்தாரோ அவரை நாம் ஆதரிக்க முடியாது அதற்காக நாம் ரணில் என்பவரை ஆதரிப்பதாக அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
எமது இனத்தை அழித்த ஒருவருக்கு ஆதரவளிக்க முடியாது! சிறீதரன் எம்.பி திட்டவட்டம் -
Reviewed by Author
on
November 05, 2018
Rating:

No comments:
Post a Comment