மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வர புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களை அனுப்பும் நாட்டுக்கான தீர்ப்பு...ஒத்திவைப்பு
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித
புதைகுழியிலிருந்து மீட்டு எடுக்கப்பட்ட மனித எச்சங்களை பகுப்பாய்வு
செய்வதற்காக எந்த நாட்டுக்கு அனுப்புவது என்பது சம்பந்தமாக வழங்கப்பட
இருந்த தீர்ப்பு நேற்று (05.11.2018) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் இது விடயமாக தொடர்ந்தும் தவணையிடப்பட்டுள்ளது.
கடந்த 23.12.2013 அன்று மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதியிலிருந்து
மாந்தை பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு அமைவாக
குழாய்கள் நிலத்தடியில் பதித்துச் சென்றவேளையில் மனித எச்சங்கள் கொண்ட புதைகுழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இவ் புதைகுழியானது அன்று தொடக்கம்
05.03.2014 வரை 33 தடவைகள் அன்றைய மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி
கனகரட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி
டீ.எல்.வைத்தியரத்ன தலைமையில் அகழ்வு செய்தபோது 84 மனித மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.
இந்த மனித எச்சங்கள் வெளிநாட்டு நிறுவனத்தின் மூலமாக பகுப்பாய்வு
செய்வது சம்பந்தமான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னாள் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
இந்த மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்கு குற்ற விசாரனைப் பிரிவு
பொருத்தமான நிறுவனமாக
Beta
Analytic in Florida USA Begeing China மற்றும் ஆஜென்டினா நாட்டுக்குரிய நிறுவனம் ஆகியவற்றை தெரிவு
செய்து மன்றில் தெரிவித்தனர்.இந்த வழக்கில் மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்கு தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனகள் தொடர்பாக குற்ற விசாரனைப் பிரிவினருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஐராகி வாதிடும் சட்டத்தரணிகள் ஆகிய இரு பகுதினருக்குமிடையே நிலவிய விருப்பு வெறுப்பு கருத்துக்கள் மன்றில் வெளியிட்ட இந்த நிலையிலேயே இதற்கான கட்டளை நேற்று திங்கள் கிழமை (05.11.2018) பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் இதற்கான தீர்ப்புக்காக பிறிதொரு திகதியை மன்று
தெரிவித்துள்ளது.
நேற்றைத் தினம் இவ் வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்
இம்மனுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் அழைக்கப்பட்டபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகள் வீ.எஸ்.நிரஞ்சன், திருமதி. ரனித்தா ஞானராஐh, மற்றும் மன்னார் சட்டத்தரணிகள் சிரேஷ்டசட்டத்தரணி எஸ்.செபநேசன் லோகு, செல்வி.எஸ்.புராதினி ஆகியோர் மன்றில் ஆஐராகியிருந்தபோதும் இவ் வழக்கில் ஆஐராகி வரும் அரச சிரேஷ்ட சட்டத்தரனி நவாவி மன்றில் ஆஐராகி இருக்கவில்லை. மேலும் முன்னாள் மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராசாவால் வழங்கப்படவிருந்த இவ் தீர்ப்பு எதிர்வரும் 23.11.2018 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அகழ்வு செய்யப்பட்ட இவ் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் யாவும்
பாதுகாப்புக்கருதி அனுராதப்புரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதும்
இங்கு குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வர புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களை அனுப்பும் நாட்டுக்கான தீர்ப்பு...ஒத்திவைப்பு
Reviewed by Author
on
November 06, 2018
Rating:

No comments:
Post a Comment