நார்வேயில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய உணவகம்!
உலகின் மிகப்பெரிய 'அண்டர் வாட்டர் ரெஸ்டாரன்ட் நார்வேயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதன் திறப்புவிழா நடைபெற உள்ளது.
உலகளவில் எல்லா தொழில்களிலும் புதுமையான விடயங்கள் கையாளப்பட்டு வருகின்றன.கடலுக்கு அடியில் உணவகங்கள் அமைக்கப்படுவதும் அப்படியான ஒன்றுதான்.
நார்வே நாட்டின் அப்படியொரு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் பணமான Norwegian krone மதிப்பில் 50 மில்லியனில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
உணவகத்தின் கண்ணாடிச் சுவர்களின் வழியே மீன்களையும், கடலின் பிற ஜீவராசிகளையும் பார்த்தபடியே மக்கள் உணவு உண்ணும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 36x13 அடி அளவுள்ள பிரமாண்டமான ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3 அடி அளவு தடிமனுள்ள அந்தக் கண்ணாடி , கடல் நீர் உள் நுழையாத வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் உணவகத்தினர். 100 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த உணவகத்தில் அமர்ந்து உணவு உண்ண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வேயில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய உணவகம்!
Reviewed by Author
on
November 05, 2018
Rating:

No comments:
Post a Comment