டிரம்புக்கு சரியான பதிலடி கொடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி -
தேசியவாதம் என்பது நாட்டுப்பற்றுக்கு நேரெதிரானது, அது நாட்டுப்பற்றுக்கு செய்யும் துரோகம் என சுடச்சுட வார்த்தைகளை பிரயோகித்தார் மேக்ரான்.
ரஷ்ய அதிபர் புடின், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு உட்பட 60 நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்பும் இருக்கும்போது இமானுவல் மேக்ரான் தனது உரையில் இவ்விதம் தெரிவித்தார்.
முதல் உலகப்போரில் பிரான்சின் சர்வதேச மதிப்பை காக்கும் வகையில் பல மில்லியன் வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள் என்று கூறிய மேக்ரான், தங்கள் நலனை மட்டுமே கருத்தில் கொள்ளும் தேசங்களின் சுய நலத்தை எதிர்த்து நின்று அவர்கள் போராடினார்கள், ஏனெனில் நாட்டுப்பற்று என்பது தேசியவாதத்திக்கு நேரெதிரானது என்றார்.
தன்னை தேசியவாதி என அழைத்துக் கொண்டு, ஈரான் அணு ஒப்பந்தம், பாரீஸ் சீதோஷ்ண ஒப்பந்தம், அகதிகளுக்கான ஐ.நா திட்டம் உட்பட சர்வதேச ஒப்பந்தங்களிலிருந்து தன்னை தனிமைப் படுத்திக் கொள்ளும் அமெரிக்க அதிபரான டிரம்புக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் மேக்ரானின் உரை அமைந்திருந்தது.
ஐரோப்பாவிற்குள்ளேயே வளர்ந்துவரும் பிளவுகளுக்கு மத்தியிலும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் விட்டுக் கொடுக்காத மேக்ரான், ஒற்றுமை உணர்வுதான் உலகைக் காப்பதாக தெரிவித்தார்.
டிரம்புக்கு சரியான பதிலடி கொடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி -
Reviewed by Author
on
November 12, 2018
Rating:

No comments:
Post a Comment