விஜயகாந்துக்கு சல்யூட்! கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக பொருட் செலவு: எவ்வளவு தெரியுமா? -
தமிழகத்தில் கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்துள்ளது. ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன.
ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு அந்த மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ் சினிமா துறையினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதே போன்று கேரள மக்கள் வெள்ளத்தில் சிக்கிய போது 1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்துக்கு சல்யூட்! கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக பொருட் செலவு: எவ்வளவு தெரியுமா? -
Reviewed by Author
on
November 22, 2018
Rating:

No comments:
Post a Comment