உலகை உலுக்கிய புகைப்படம் -மூச்சு விடவும் வலுவில்லை:
மருத்துவனை படுக்கையில் மூச்சுவிடவும் வலுவின்றி தவிக்கும் அந்த 10 வயது சிறுவனின் மொத்த உடல் எடை வெறும் 8 கிலோ என கூறப்படுகிறது.
காஸி ஸாலா என்ற அந்த 10 வயது சிறுவனின் இந்த நிலைக்கு அங்குள்ள உள்நாட்டு யுத்தமே காரணம்.
உணவை கண்ணால் பார்த்தே பல நாளானதாக கூறும் காஸி ஸாலாவுக்கு மூச்சுவிடுவதே மிகவும் கடினமானதாக உள்ளது.
கண்கள் திறப்பதற்கே வலுவில்லை. ஸாலா மட்டுமல்ல, யேமன் நாட்டில் இதே பருவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பட்டினியால் கொடுமைகள் பல அனுபவிக்கின்றனர்.
ஊட்டச்சத்து குறைபாட்டால் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் பிஞ்சு குழந்தைகளும் ஏராளம்.
கிடைக்கும் உணவை கூட சாப்பிட முடியாத அளவுக்கு நோய்வாப்பட்டுள்ளவர்களுக்கு குழாய் வழியாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் மன்ற அறிக்கையின்படி பட்டினியால் பரிதவிக்கும் 14 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் சிறார்கள் என கூறப்படுகிறது.
4.5 மில்லியன் சிறார்கள் பாடசாலைகளில் செல்வதில்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யுத்தத்தினால் சுமார் 2500 பாடசாலைகள் தகர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் துவங்கிய இந்த யுத்தமானது தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
உலகை உலுக்கிய புகைப்படம் -மூச்சு விடவும் வலுவில்லை:
Reviewed by Author
on
November 22, 2018
Rating:

No comments:
Post a Comment