ஈழத்தில் ஆமைக்கறி சாப்பிட்டது உண்மையா.....அந்த 08நிமிடத்தில் நடந்தது என்ன? -
நான் 8 நிமிடம் மட்டுமே விடுதலை புலிகளுடன் இருந்தேன். அதை மறுக்க வேண்டும் என்றால் விடுதலை புலிகள்தான் மறுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளின் போது சீமான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீமானின் சில கருத்துக்கள் தொடர்பில் விடுதலை புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர்களும், நெருக்கமான சில அமைப்புகளும் விமர்சனம் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பட்டது. இதற்குப் பதில் அளித்த சீமான்,
நான் 8 நிமிடம்தான் இருந்தேன் என்பதை என்னை குற்றம் சாட்டுபவர்கள் பார்த்தார்களா? பயணம் செய்தவன் நான். நான்தான் நடந்ததை கூற வேண்டும். நான் ஏகே 47 சுட்டேன். ஆமைக்கறி சாப்பிட்டேன். அதைத்தான் கூறுகிறேன்.
எனக்குப் பணம் வருவதாக கூறுகிறார்கள். குற்றம் சாட்டுபவர்களுக்கு பணம் வராத போது எனக்கு மட்டும் பணம் வருவது ஏன்? எனக்குப் பணம் வருகிறது என்றால் குற்றம் சாட்டுபவர்களுக்கும் வர வேண்டும் தானே? பணம் வருகிறது என்று சொல்வதெல்லாம் இனத்தையே கொச்சைப்படுத்தும் செயல். இது காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுபவை. காயப்படுத்தி நம்மை களத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான வேலை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தில் ஆமைக்கறி சாப்பிட்டது உண்மையா.....அந்த 08நிமிடத்தில் நடந்தது என்ன? -
Reviewed by Author
on
December 05, 2018
Rating:

No comments:
Post a Comment