மன்னார் மக்கள் மன்றத்தினூடாக முல்லைத்தீவு தேவிபுரம் இடைத்தங்கல் முகாம் மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு-(படம்)
வடக்கு மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு காரணமாக அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்ட முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் மன்னார் மாவட்டத்தில் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியில் இளைஞர் குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில்,ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் நேற்று வியாழன் கிழமை (27-12-2018) நேரடியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, தேவிபுரம் இடைதங்கல் முகாமில் உள்ள 102 குடும்பத்தினருக்கு உலர் உணர்வு பொருட்கள் அடங்கிய பொதியும் ,60 குடும்பங்களுக்கு நுளம்பு வலையும் ,சிறுவர்களையும் ,நோயாளர்களையும் கொண்ட குடும்பத்திற்கு பால்மாவும் வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு பிரதேசச் செயலர் அவர்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டது.மன்னார் மாவட்டத்தில் தன்னார்வம் மிக்க இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வடக்கில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் மன்னார் மாவட்டத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (27) குறித்த பொருட்கள் முல்லைத்தீவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
-மன்னார் மாவட்ட இளைஞர்கள் குழு மற்றும் துளிர் உதவும் கரங்கள் இணைந்துMPS- மன்னார் மக்கள் மன்றத்தினூடாக குறித்த உதவிகளை நேரடியாக சென்று கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மக்கள் மன்றத்தினூடாக முல்லைத்தீவு தேவிபுரம் இடைத்தங்கல் முகாம் மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு-(படம்)
Reviewed by Author
on
December 28, 2018
Rating:
Reviewed by Author
on
December 28, 2018
Rating:














No comments:
Post a Comment