12 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பிடம் உறுதியளித்த மைத்திரி! -
அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெவ்வேறு 12 சந்தர்ப்பங்களில் உறுதி வழங்கியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் இவ்வாறு உறுதியளிப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் எதிர்ப்பார்க்கின்றனர்.
எனினும், அது வெறும் கனவாக மட்டுமே இருக்கின்றது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் 12 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கூட்டமைப்பிடம் உத்தரவாதம் வழங்கியிருந்தார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் அவர் உறுதி வழங்கினார். எனினும், ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்ற தவறிவிட்டார்.
இந்நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்மைப்பு முன்னெடுத்துள்ள போராட்டம் ஒரு போதும் ஓயாது” என மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளார்.
12 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பிடம் உறுதியளித்த மைத்திரி! -
Reviewed by Author
on
December 22, 2018
Rating:

No comments:
Post a Comment