சம்பந்தன் கௌரவமான முறையில் பதவியை கொடுத்து விட்டு விலக வேண்டும்! -
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி பதவியை கௌரவமாக எம்மிடம் ஒப்படைத்து விலகி விடுவதே சிறந்ததாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளாதர்.
மஹிந்த சமர சிங்க உள்ளிட்ட ஐவர் அமைச்சரவை அமைச்சுப்பதவியினை பெறுக்கொள்ள முயற்சிப்பதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பாண்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது.
எதிர்கட்சி தலைவர் இருவர் இருப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே காணப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர். அதிலும் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 98 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டமைப்பு முயற்சித்தாலும் அந்த எண்ணிக்கையை எட்ட முடியாது.
நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவர் என்ற அடிப்படையில் தம்மிடம் எதிர்கட்சி பதவி வகிப்பதற்கான பெரும்பாண்மை இல்லை எனும் போது கௌரவமாக அதனை எம்மிடம் ஒப்படைத்து விலகி விடுவதே சிறந்ததாகும்.
பெரும்பாண்மையற்ற ஒரு அரசாங்கத்தின் அமைச்சரவையே நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என்பதை அவதானித்து எதிர் கட்சியாக நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
சம்பந்தன் கௌரவமான முறையில் பதவியை கொடுத்து விட்டு விலக வேண்டும்! -
Reviewed by Author
on
December 22, 2018
Rating:

No comments:
Post a Comment