அண்மைய செய்திகள்

recent
-

3 கைகளுடன் பிறந்து கிராமத்திற்கே கடவுளாக மாறிய குழந்தை:


சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று கைகளுடன் பிறந்திருக்கும் குழந்தையை கடவுள் என நினைத்து கிராமமக்கள் வழிபடும் வினோத சம்பவம் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிளாஸ்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராதிகா சாகு என்ற பெண்ணுக்கு கடந்த நவம்பர் 2ம் தேதியன்று ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.
பிறக்கும்போது 3 கைகள் இருந்துள்ளன. வலது கையில் மார்போடு சரிவர வளராத அந்த கையால் பிற்காலத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்படலாம் எனவும், விரைவில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனவும் சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவன தலைவர் டாக்டர் B.P. சிங், கூறியுள்ளார்.

ஆனால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், ராதிகாவின் குழந்தை கடவுளின் மறுபிறப்பு எனக்கூறி வணங்கி வருகின்றனர்.
இந்தியாவில் கூடுதல் மூட்டுகளுடன் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் இந்து தெய்வங்களின் மறுபிறப்புகளாக வணங்கப்படுகின்றன.

இந்து கடவுள்களின் சித்தரிப்புகள் பெரும்பாலும் பல கைகளை கொண்ட வண்ணம் இருந்துள்ளன. அவை சூப்பர்ஹுமன் சக்தி மற்றும் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறனை வலியுறுத்துகிறது.
அவ்வப்போது ஒரு சில தெய்வம் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைகளுடன் சித்தரிக்கப்படுகிறது, இது கடவுளின் பலதரப்பட்ட தன்மையையும் அவற்றின் பல குணங்களையும் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3 கைகளுடன் பிறந்து கிராமத்திற்கே கடவுளாக மாறிய குழந்தை: Reviewed by Author on December 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.