அவுஸ்திரேலியாவுக்குள் படகு வழியாக நுழைய முயற்சிப்பவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை! -
அந்த எச்சரிக்கையில், “அவுஸ்திரேலியாவின் கடல் எல்லைகள் கண்காணிக்கப்படுகின்றன. ரோந்து நடக்கின்றது. அத்துடன் வருடத்தின் ஒவ்வொரு நாளும் பாதுகாக்கப்படுகின்றன.
படகு வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயற்சிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார். “நீங்கள் வழி மறுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுவீர்கள்” என தன்னுடைய எச்சரிக்கை செய்தியை நிறைவு செய்திருக்கிறார்.
2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நடவடிக்கையின் கீழ், அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 34 படகுகள் நடுக்கடலில் தடுக்கப்பட்டு 800 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.
அதேபோல், 79 ஆட்கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டதில் 2,500 மேற்பட்ட அகதிகள் - தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை நோக்கிய படகுகளில் ஏறுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள், ரோஹிங்கியா அகதிகள் இவ்வாறான படகு வழி பயணங்களை முயற்சித்திருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவுக்குள் படகு வழியாக நுழைய முயற்சிப்பவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை! -
Reviewed by Author
on
December 21, 2018
Rating:

No comments:
Post a Comment