கோடிக்கணக்கில் கொட்டும் பணம்! இலங்கைக்கு சட்டவிரோத கடத்தல்-
வங்காளவிரிகுடா கடல் பகுதியில் உள்ள மன்னார்வளைகுடா பகுதி பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளப்பகுதியாகும். உலகில் உள்ள பவளப்பாறைகளில் 17 சதவிகிதம் பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதால் பல்வேறு அரிய வகையான கடல்வாழ் உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன.
இந்திய கடல்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், இப்பகுதி பாதுகாக்கப்பட்ட கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடல் பசு, கடல் குதிரை, கடல் அட்டை, பால்சுறா, சங்குவகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கடல் அட்டைகளை விற்பனை செய்வதால் அதிக லாபத்துடன் பணம் கொட்டுவதால் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழிலில் சில மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தடுக்கும் பணியில் வன உயிரினப் பாதுகாப்புத்துறை, கடலோரப் பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வந்தாலும், கடல் அட்டை கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி கீழ அரசரடி பகுதியில் உள்ள ஒரு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மன்னார்வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், அப்பகுதில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் வன உயிரின பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சட்டவிரோதமாக தடைசெய்யபட்ட 1,500 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர். இதையடுத்து பதப்படுத்தப்பட்டு உலர வைக்கப்பட்ட நிலையில் உள்ள கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நாகூர் மைதீன், முகைதீன், அருணாசலம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.

கோடிக்கணக்கில் கொட்டும் பணம்! இலங்கைக்கு சட்டவிரோத கடத்தல்-
Reviewed by Author
on
December 06, 2018
Rating:
No comments:
Post a Comment