இருவரும் மூத்த கலைஞர்கள் ஓவியர் வயித்தி யோசப்பு- எழுத்தாளர்-பிரகாசம் சந்தியோகு...
இருக்கின்றார்கள் இரண்டு கலைஞர்கள் இன்று வரை அடையாளம் இல்லாமல் இலைமறை காயாகவே இறுதிக்காலம் வரை இருந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களை நியூமன்னார் இணையம் ஊடாக விம்பம் பகுதிக்காக சந்தித்திருந்தேன்….ஆற்றல் உள்ளது திறமையுள்ளது ஆனால் அதற்கான சான்றுகள் குறைவு விருதுகள் பட்டங்கள் எதுவும் இல்லை.... ஆனாலும் அவர்கள் இருவரிடமும் அவர்களுக்கு உரித்தான தனித்திறமை ஆற்றல் உண்டு எனலாம்.
ஆம் அந்த இருவரும் மூத்த கலைஞர்கள் அவர்கள்
- ஓவியர் வயித்தி யோசப்பு-
- எழுத்தாளர்-பிரகாசம் சந்தியோகு

இரண்டாவதாக….
ஐயா உங்களைப்பற்றி சொல்லுங்கள்…
நான் 1945ம் ஆண்டு பிறந்தேன் மன்னார் வட்டக்கண்டல் அடம்பொன் தாழ்வு கிராமத்தில் வசிக்கும் பிரகாசம் சந்தியோகு அவர்களின் தந்தை சாமூவேல் தாய் சாமூவேல் ரோசம்மா அவர்களின் புதல்வனாய் பிறந்து பல இடப்பெயர்வுகளுக்கு பின் இன்றும் இக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன்.
எனது அப்பாவும் எனது அம்மப்பாவும் புலவர்கள் ஆதலால் சிறுவயதில் இருந்தே எனக்கும் ஆர்வம் இருந்தது எனது தந்தை புலவர் சு10சையவர்கள் இம்மானுவேல் பெரிய நாடகம் அந்தோனியார் நாடகம் சந்தோமையார் வாசாப்பு என்று பல நாடகநாட்டுக்கூத்துக்களை எழுதியுள்ளார் 1964ம் ஆண்டு மன்னார் நகரமண்டபத்தில் வைத்து கோடை இடி எனும் பட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அழகக்கோன் அவர்களால் பொன்னாடை போர்த்தி வழங்கிவைத்தார். அவரது வழித்தோன்றலில் நானும் ஆர்வமாக இருந்தேன ஆனால் அப்போது எந்த நாடகமும் மேடையேற்றவில்லை.
அப்பாவின் நாடகத்திற்கு பின்பு எனது முதல் நாடகமாக செபமாலை மாதா என்ற நாடகத்தினை எழுதி இராக தாளங்கள் அமைத்து மேடைறே;றினேன் வரவேற்பும் கிடைத்தது.அதனைத்தொடர்ந்து சங்கிலியன் மன்னனின் வேதசாட்சிகள் நாடகமும் மூவிராசாக்கள் நாடகமும் எழுதி மேடையேற்றாமல் கிடக்கின்றது.
நாடகம் தவிர்ந்து கவிதைகள் பாடல்கள் வாழ்த்துப்பாக்கள் கல்வெட்டுக்கள் என்பவை எழுதுவதோடு இராக-தாளங்கள் அமைத்து பாடுவேன் நிறையவே எழுதியுள்ளேன் இன்னும் எழுதி க்கொண்டு இருக்கின்றேன்.
- பாசிமோட்டை கெபி-கொடியேற்றக்கவி
- கர்த்தர் பேரில் காவியம்
- அலெக்சாண்டர் கவிதாவின் நன்றிப்பாடல்
- பாலைப்பெருமாள் கட்டு நிறஞ்சலா துறவி வெண்பா
- ஆலங்குளம் அருட்குமார் குரு வரவேற்பு தரு
- மன்னார் மாவட்ட சிறப்பு பாடல்
- மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை பாலையடிப்புதுக்குளம் வருகை கவிப்பாடல்.
- குழந்தை இயேசு கவி
- கல்யாணபாட்டு சிந்து-03
- நிராட்டு விழா பாடல்கள்-03
- செபமாலை மாதா தாளிசை-கவி
- செபமாலை மாதா பிராத்தனை-சிந்து
- கிறுக்கட்டு அந்தோனியார்-தாழிசை-கவி
- குழந்தை இயேசு தாழிசை-கவி
- வியாகுலமாதா தாழிசை-கவி
- சவேரியார் பேரில் கவி
- செபமாலை மாதா கவி
- வாழ்வோதய தலையியின் வருகை தரு
- கர்த்தர் பேரில் கவி
- இந்தியாவின் வினி யோசப்பு ஆண்டகை வருகை
- அந்தோனியார் தரு-02
- இயேசுபாலன் பிறப்பு கும்மி-02
- குழந்தை இயேசுக்கவி
- மாந்தை கம்மாளர் சரித்திரப்பாடல்
- செபமாலை மாதா கவி
- ஆட்காட்டிவெளி சவேரியார் தரு
- வியாகுலமாதா வேறுதரு
- ஆடங்குளம் தொம்மையின் வாழ்த்துக்கவி
- புனித லூர்து மாதா தாழிசை
- தொம்மையார் தாழிசை
- குமனாயங்குளம் ஆலயம்கட்டுவதற்கு பக்திப்பாடல-01
- சந்தியோகுமையார் கவி-02
- செபஸ்தியார் கவி
- பாளையடிப்பெருமாள் கட்டு அந்தோனியார் பேரில் கவி
- கல்யாணப்பாட்டு கவி-06
- அந்தோனியார் புரம் கவி
- யுவானியார் தரு-வெண்பா-03
- ஆந்தோனியார் தரு-கறுக்காகுளம்
- இயேசுவின் பாடுகளின் பேரில்-தாழிசை இவ்வாறு பால்கள் கவிகள் வாழ்த்துப்பாக்கள் என எழுதியுள்ளேன் எழுதியும் வருகின்றேன்.
எனது தந்தைக்குப்பிறகு நான் பெரிதாக எனது திறமைகளை வெளிக்காட்டவில்லை எனது விருப்பமின்மையும் என்னுடன் சேர்ந்து செய்வதற்கான ஆட்கள் இல்லாமையும் தற்போது உள்ளவர்களுக்கு பழைய இலக்கண இராக தாளங்கள் சரியாக வராதுஅத்துடன் எனது பொருளாதார நிலை யுத்தம் போன்றவற்றினால் எனது திறமைகள் எனது கிராமத்தவர்களுக்கே தெரியாமல் போய்விட்டது.
உங்களின் விருப்பம் என்றால்…
எனது நாடகங்களில் சங்கிலியன் நாடகத்தினை நூலுருவாக்கம் செய்யவேண்டும் என்பதுதான் அதுவும் கனவாகிப்போகும் தற்போது எனது முதுமையும் இயலாமையும் சேர்ந்துள்ளது அதனால் மெல்லமாய் பயணிக்கின்றேன்.
நியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து…
நான் கேள்விப்பட்டதில்லை என்ககும் போனுக்கும் தொலைதூரம் ஆனால் இன்று வீடு தேடி வந்து இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை பேட்டிகண்டு வெளியுலகிற்கு கொண்டுவரும் நியூமன்னார் இணையத்திற்கும் உங்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
எங்களைப்போன்ற மூத்த கலைஞர்கள் அறியப்படாமல் 60வயதுக்கு மேல் உள்ளார்கள் அவர்களையும் வெளிக்கொண்டுவாருங்கள்..
- சந்திப்பு -வை.கஜேந்திரன்-
முதலாவதாக….
ஐயா உங்களைப்பற்றி சொல்லுங்கள்…நான் 1935-06-13 பிறந்தேன் மன்னார் வட்டக்கண்டல் பாலையடிப்புதுக்குளம் கிராமத்தில் வசிக்கும் வயித்தி யோசப்பு அவர்களின் தந்தை பிலிப்பு வயித்தி தாய் வயித்தி சந்தாள் அவர்களின் புதல்வனாய் பிறந்து பல இடப்பெயர்வுகளுக்கு பின் இன்றும் இக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்றார்.
உங்களின் ஓவியக்கலை பற்றி-
ஆம் எனக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தின் மீது அதிக விருப்பம் இருந்தது எதைப்பார்த்தாலும் உடனே கீறுவேன் அப்படிக்கீறி கீறி பலருக்கும் கொடுத்துள்ளேன் இன்று வரை கீறிக்கொண்டு தான் இருக்கின்றேன் அந்த ஓவியத்துடன் தான் வாழ்ந்து வருகின்றேன்.
நிறையவுள்ளது ஆம் அதிலும் நான் மன்.பாலையடிப்புதுக்குளம் றோ.க.த.க பாடசாலையில் 05ம் வகுப்பு வரைதான் படித்தேன் அப்போது தரம் 05ம் வகுப்பு என்பது இப்போது 10ம் ஆண்டுக்கு சமனான படிப்பாகும் அல்லவா ஆம் அப்போது நான் தரம் 03ம் வகுப்பில் கற்கின்றேன். எமது வகுப்பாசிரியர் கரும்பலகையில் காலையில் இருந்து ஒரு மணித்தியாளமாக ஒரு குதிரை கீறி முடித்தார் ஆனால் அது குதிரை மாதிரி இல்லை சேர் நான் குதிரை வடிவாக கீறுவேன் என்றதும் கீறு என்றார் நான் கீறினேன் அவர் குதிரையின் வாலை அழித்துவிட்டார் எல்லா மாணவர்களும் கண்ணை கட்டி வால் வைக்க சொன்னார்கள் எல்லோரும் பிழையாக வைத்தார்கள் அத்தோடு நிற்கவில்லை எனது கண்ணை துணியால் கட்டிவிட்டு என்னையும் வால் வைக்க சொன்னார்கள் நான் முதல் அந்த குதிரையை வரையும் போது எனக்கு அந்த கரும்பலகையின் நீளம் அகலம் கணக்கிட்டு குதிரைக்கு வாலினை சரியாக வைத்தேன் எல்லோரும் பாராட்டினார்கள் எனக்கு ஆசிரியர் குயின்மேரி கொப்பிகள் கலர்சோக் பெண்சில் பரிசாக தந்தார் இது மறக்கமுடியாத விடையங்கள் தான்.
அதுபோல இன்னொரு சந்தர்ப்பம் எனது திறமைக்கு கிடைத்தது.
2003ம்
ஆண்டு விவசாய விழாவில் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது ஆம் நான் ஒரு
பொரிய யானையினை உருவாக்கினேன். சுமார் 35 நாட்களுக்கு மேலாக இரவுபகலாக
நானும் எனது உறவுக்காரப்பெடிகள் இருவருடன் சேர்ந்து யானையினை
உருவாக்கினேன். அந்த யானையினை ரக்ரரில் ஏத்தி எங்களது ஊரில் இருந்து
அடம்பனுக்கு கொண்டு செல்லும் போது பலர் உண்மையான யானை ஊருக்குள்
புகுந்துவிட்டது என்று ஓட்டம் பிடித்தார்கள் அதைக்கானும் போது எனது
35நாட்கள் பட்ட கஸ்ரத்திற்கான பலன் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
விவசாய விழாவில் சிறப்பு பரிசை பெற்ற எனது பெரிய யானை பணப்பரிசையும்
பெற்றுத்தந்தது.
எனது தொழிலாக கமத்தொழில் இருந்ததினால் நான் இரவு நேரங்களில் சிறப்பாக வேட்டையும் ஆடுவேன் குறிபார்த்து சுடுவதில் கெட்டிக்காரன்.
- அதுபோல கண்டுமதிகெட்டான் கட்டை
- கைவிணைப்பொருட்கள் அத்துப்படி
- களிமண்ணில் பல உருவங்கள் செய்வேன்
- நாடக நாட்டுக்கூத்து வாசாப்புக்களுக்கான சோடிணைகள் மேக்கப் எல்லாம் செய்வேன்
- பலகையினால் உருவங்கள் செய்தல்
- எலிப்பொறி-பண்டையமுறையில்
- உருவம் பொருத்துதல் கட்டை
- நூல் ஓடும் கட்டை
- கடதாசியில் உருவங்கள் செய்தல்
அத்தோடு புதிர்க்கணக்குகள் சில புதுவகையான விளையாட்டுக்கள் ஒவ்வொன்றாக செய்துகாட்டினார் உண்மையில் வியப்பாக இருந்தது.
முதல்
தடவை கண்டு கதைத்துவிட்டு படங்கள் கீறி வையுங்கள் வாறன் 10நாட்கள்
இடைவெளியில் மீண்டும் சந்தித்தேன் சுமார் 15 ஓவியங்களை வரைந்து
வதத்திருந்தர் அவரது வயதுக்கும் அந்த ஓவியத்திற்கும் பார்க்கும் போது
உண்மையில் ஆசிசரியமாகத்தான் இருந்தது. அத்தனையும் பார்த்தவுடன் ஏன்....
இதுவரை நீங்கள் உங்களின் ஓவியம் வரையும் ஆற்றலை வெளிப்படுத்தாமல் இருந்தீர்கள்…
எனக்கு இருந்த ஆற்றலை எல்லோரும் பயன்படுத்தி கொண்டார்கள் ஆனால் என்னை ஒருவரும் வெளியுலகிற்கு கொண்டுவரவில்லை அப்படி நினைக்கவும் இல்லை அத்தோடு நானும் எனது பாடும் என்று முயற்சி எடுக்காமல் இருந்துவிட்டேன் எனது குறைதான் இப்போது வயதும் போய்விட்டது இனி என்ன செய்வது…
நியூமன்னார் இணையம் பற்றி..
எனக்கு எதுவும் தெரியாது ஆனாலும் எனது இந்த கடைசிக்காலத்திலாவது எனது திறமையினையும் முதலாவது நேர்காணல் மூலம் வெளிக்கொணரும் நியூமன்னார் இணையத்திற்கும் உங்களுக்கும் எனது மனம் கனிந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களும் என்றும்…தொடரட்டும் உங்கள் சேவை……
இருவரும் மூத்த கலைஞர்கள் ஓவியர் வயித்தி யோசப்பு- எழுத்தாளர்-பிரகாசம் சந்தியோகு...
Reviewed by Author
on
December 16, 2018
Rating:

No comments:
Post a Comment