பிரான்ஸுக்கு சொந்தமான தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு -
New Caledoniaவின் லாயல்டி தீவின் கிழக்கு கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கடியில் நிலநடுக்கமானது New Caledoniaவின் கிழக்கு கரையோரத்திலிருந்து லாயல்டி தீவின் கிழக்கு-தென்கிழக்கில்155 கிமீ (95 மைல்) தொலைவில் சுமார் 10 கிமீட்டர் (6 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
New Caledonia தீவில் 270,000 மக்கள் வாழும் நிலையில், இது போன்ற நிலநடுக்க சமயத்தில் கரையோர பகுதியில் வாழும் மக்கள் உயரமான இடத்துக்கு செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸுக்கு சொந்தமான தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு -
Reviewed by Author
on
December 05, 2018
Rating:

No comments:
Post a Comment