வவுனியாவில் மழை காரணமாக 610 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு -
இது தொடர்பில் அவர் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் உள்ள 820 இற்கு மேற்பட்ட குளங்களில் 560 குளங்களின் கீழ் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதில், கடந்த ஒரு மாத காலப்பகுதியில் பெய்த மழை காரணமாக 300 குளங்கள் நீர் நிறைந்து வான் பாய்ந்துள்ளன. மழை மற்றும் வான் பாய்ந்தமை காரணமாக 610 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. அழிவடைந்த நெற்செய்கை நிலங்களில் மக்கள் மீளவும் பயிரிட்டுள்ளனர்.
அழிவு விபரங்கள் பெறப்பட்டு அமைச்சுக்கும், திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் குளங்கள் உடைப்பெடுக்காமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
வவுனியாவில் மழை காரணமாக 610 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு -
Reviewed by Author
on
December 05, 2018
Rating:

No comments:
Post a Comment