அலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்! -
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டிற்கு ரணில் சென்றுள்ளதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் நேற்றைய தினம் வரையில் அலரி மாளிகையில் ரணில் தங்கியிருந்தார்.
அதற்கமைய சுமார் 50 நாட்களின் பின்னர் அவர் அலரி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
அலரி மாளிகையில் அவர் தங்கியிருந்த காலப்பகுதியில் அங்கு இடம்பெற்ற பல ஊடகவியலாளர் சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்தார்.
பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்! -
Reviewed by Author
on
December 17, 2018
Rating:

No comments:
Post a Comment