லண்டனில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் ஒட்டி பிறந்த பெண் குழந்தைகள்:
லூதர் (42) மற்றும் நிபா (36) தம்பதிக்கு கடந்த 2002-ல் கிழக்கு லண்டனில் உள்ள Homerton மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
குழந்தைகளுக்கு ஜைநாப் மற்றும் ஜன்னட் என பெயர் வைக்கப்பட்டது.
ஜைநாப் மற்றும் ஜன்னட்டின் நெஞ்சிலிருந்து வயிறு பகுதி வரை ஒட்டிய நிலையிலேயே இருந்தது. இருவருக்கும் ஒரு கல்லீரல் மட்டுமே இருந்தது.

குழந்தைகளை பிரிக்க மருத்துவர்கள் முடிவு செய்த நிலையில் மில்லியனில் ஒருவர் மட்டுமே இப்படி செய்வதால் உயிர் பிழைக்க முடியும் என கூறினர்.
இதையடுத்து பிறந்து ஆறு வாரத்தில் வெற்றிகரமாக ஜைநாப் மற்றும் ஜன்னட் பிரிக்கப்பட்டனர்.
தற்போது இருவருக்கும் 16 வயதாகிறது. சமீபத்தில் தான் ஜைநாப்பும், ஜன்னட்டும் தங்களது 16வது பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
ஜைநாப்புக்கு தான் பிழைக்க காரணமாக இருந்த Great Ormond Street மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவர் ஆக வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது.
 அதே போல ஜன்னட்டுக்கு வழக்கறிஞர் ஆகி பிரான்ஸில் வசிக்க வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது.
எப்போதும் ஒன்றாக இருக்கும் இரண்டு சகோதரிகளும், தங்களின் உயர்ந்த நோக்கத்துக்காக பிரியவும் தயாராக உள்ளார்கள்.
ஒரு கட்டத்தில் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம் என கூறுகிறார்கள்.
இவர்களின் தாய் நிபா கூறுகையில், ஒருகட்டத்தில் 16 வயது வரை எல்லாம் இருவரும் வாழ்வார்களா என பயந்தேன், காரணம் அவர்களின் உடல்நிலை தான்.
 ஜைநாப் மற்றும் ஜன்னட் ஆகிய இருவரும் தங்களுக்கு விருப்பமானவற்றை செய்யலாம், தாங்கள் நினைத்ததை அடையலாம்.
நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளை பெற்ற மற்ற குடும்பங்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், நம்பிக்கையை இழக்க வேண்டாம், எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
 
 
 
லண்டனில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் ஒட்டி பிறந்த பெண் குழந்தைகள்: 
 
        Reviewed by Author
        on 
        
January 02, 2019
 
        Rating: 
      

No comments:
Post a Comment